பிரதமரை சந்திக்கிறார் தமிழக ஆளுநர்! என்ன நடக்கப்போகிறது தமிழகத்தில்! அடுத்தடுத்த அதிரடிகள்-தி.மு.க எம்.பியின் பதவி பறிபோகுமா?

RNRAVI OREDESAM

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி சென்று பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்களை சந்திக்க உள்ளார்.

இதுவரை தமிழக ஆளுநர்களாக முன்னாள் அரசியல்வாதிகள், கட்சிக்காரர்கள் இல்லை மத்திய அரசில் யாருக்கோ அல்லது மாநில அரசு விரும்பி கேட்டு கொண்டவர்களே ஆளுநராக இருந்தார்கள்.

முதல் முறையாக உளவு மற்றும் காவல்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட சுருக்கமாக சொன்னால் அஜித் தோவலுக்கு அடுத்த இடத்தில் உள்ளவர் நியமிக்கபட்டிருப்பது இதுதான் முதல்முறை ஆர்.என்.ரவி என அழைக்கபடும் இந்த புதிய ஆளுநர் பாட்னாவில் பிறந்தவர், 1976ல் காவல்துறைக்கு வந்து கேரளாவில் பணியாற்றி பின் மத்திய உளவுதுறைக்கு மாற்றபட்டவர்.

இவர் ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் சைலண்டாக பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது.ஆர்.என்.ரவி அவர்கள் முதல் சந்திப்பு டி.ஜி.பி., சைலேந்திரபாபு இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின் 3000 க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டர்கள் முதல்வர் சந்திப்பு முதலில் என எதிர்பார்த்த வேளையில் டி.ஜி.பி.யை சந்தித்தது முதல்வருக்கு ஷாக் அடித்தது.

மேலும் அண்ணா பிறந்த தினத்தன்று 700 ஆயுள் கைதிகளை விடுதலை செய்வோம் என திமுக அரசு கூறியது ஆனால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் வேண்டும்.700 பேர் பட்டியலை வாங்கி பார்த்த ஆளுநர் ஓரமாக வைத்து விட்டு வேலையினை பாருங்கள் என்று கூறிவிட்டார்.

இதனை தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநரை சந்தித்தார், தமிழகத்தில் திமுகவின் அராஜகம் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடு பற்றி புகார் அளித்தார். இது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. அடுத்தே நாளே முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்தார். அதற்கடுத்த நாள் அனைத்து நாட்களும் கோவில் திறக்கும் உத்தரவை பிறப்பித்தார் ஸ்டாலின்.

மேலும் உள்ளாட்சி தேர்தலின் போது பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரை கொடூரமாக தாக்கினார்கள் தி.மு.க எம்.பி ஞானதிரவியம் மற்றும் அவரது மகன்நெல்லை தொகுதி தி.மு.க.பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் மீதும் அவரது மகன்கள் மீதும் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திமுகவின் கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் கோவிந்தராசு என்ற தொழிலாளி கொடூரமான முறையில் அடித்து, கழுத்தை நெறித்து கொல்லப்பட்ட வழக்கில், ரமேஷின் உதவியாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் திமுக எம்.பியும் ரமேஷ் கொலை வழக்கில் சிறையில் உள்ளார். மேலும் சிறையில் உள்ள இவரின் பதவியை பறிக்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளது.

அடுத்த சந்திப்பு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவரும் தன் பங்கிற்கு திமுக அராஜகங்கள் குறித்து ஆளுநரை சந்தித்து புகார் தெரிவித்துள்ளார், இதன் பின்ஆளுநர் சத்குருவை சந்தித்தது தான் டாப் சந்திப்பின் போது கோவில் நிர்வாகத்தை அரசிடமிருந்து மீட்கவேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார் சத்குரு. மேலும் அறநிலையதுறையில் நடக்கும் அவலங்கள் குறித்து ஒரு பைல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

மேலும் தற்போது தமிழகத்தில் மின்சாரத்துறை ஊழல் தான் அதிகமாக பேசப்பட்டுவருகிறது. ஊழல் விவகாரத்தினை கையில் எடுத்த பாஜக தலைவர் அண்ணாமலை விடுவதாக தெரியவில்லை அடுத்தடுத்து மின்சார வாரியத்தில் நடக்கும் நிர்வாக சீர் கேட்டினை பற்றி ஆதாரங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. திமுகவின் மிக பெரும் ஊழலை தடுத்து நிறுத்த பாஜக முயன்று வருகிறது.

இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை 5 மணிக்கு டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். டெல்லி சென்ற பின்னர்,ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். முன்னதாக,கடந்த வாரம் பாஜக தலைவர் சந்திப்பு முதல் சத்குரு சந்திப்பு நிலையில்,ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் இன்று டெல்லி பயணம் மேற்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அதே வேளையில் தமிழகத்தில் ஊழல் புயல் சின்னமாக மாறி கொண்டிருக்கும் மின்வாரிய ஊழல் வீசிக்கொண்டிருக்கும் நிலையில் ஆளுநர் ரவி டெல்லி செல்ல உள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.திமுக எம்.பியும் ரமேஷ் கொலை வழக்கில் சிறையில் உள்ளார். சிறையில் உள்ள இவரின் பாராளுமன்ற பதவியை பறிப்பது குறித்தும் இந்த சந்திப்பில் பேசலாம் என தெரிகிறது.

Exit mobile version