பஞ்சமி நிலம் மூலபத்திரம் என்றால் தி.மு.கவிற்கு சற்று பயம் வந்துவிடும் என்பதே உண்மை. முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தை அபகரித்து கட்டப்பட்டது என பா.ஜ.க வின் தடா பெரியசாமி, டாக்டர் ஸ்ரீநிவாசன் அவர்கள் எஸ்.சி. எஸ்.டி ஆணையத்திடம் புகார் அளிக்க அந்த புகாரை ஏற்றுக்கொண்டு விசாரணையில் இறங்கியது எஸ்.சி. எஸ்.டி ஆணையம்.
இதனை தொடர்ந்து தி.மு.க-தலைவர் ஸ்டாலினுக்கு முரசொலி பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு அழைப்பு வந்தது.பின்பு மாற்று பிரமுகராக ஆர்.எஸ்.பாரதியை அனுப்பினார் ஸ்டாலின் மேலும் முரசொலி அலுவலகம் வாடகைக்கு தான் இருக்கிறோம் என பல்டி அடித்தார் தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின்.
முரசொலி நிர்வாகத்துக்கு, 2019 நவம்பர், டிசம்பரில், ஆணையம் ‘நோட்டீஸ்’ அனுப்பியது.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், முரசொலி அறக்கட்டளை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலத்தின் உரிமை குறித்து, தேசிய ஆதிதிராவிட ஆணையம் உத்தரவிட, தடை விதிக்கவும் கோரப்பட்டது.
இந்த வழக்கில் இன்று (ஜன.,10) சென்னை ஐகோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவு: முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதாக எழுந்த புகாரில் விசாரணையை தொடரலாம். அனைத்து தரப்புக்கும் வாய்ப்பளித்து விளக்கத்தைப் பெற்று, பட்டியலினத்தோர் ஆணையம் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே சென்னை, சேலம், மதுரை, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பஞ்சமி நிலத்தை அபகரித்த முரசொலியின் மூலப் பத்திர நகலை கண்டுபிடித்துக் கொடுத்தால் அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்புடன் ஒட்டப்பட்டு பரபரப்பு ஏற்படுத்தியது .
இந்த நிலையில் மீண்டும் முதலில் இருந்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் தீர்ப்பானது திமுகவினரை திணற வைத்துள்ளது. எப்படி மீள போகிறோம் என்ற ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்