தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாவம் புண்ணியம் குறித்து போதித்த சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷ் அவர்கள் இது என்னுடைய ஏரியா எங்கே வந்து எதை செய்கிறாய் என மஹா விஷ்ணுவுக்கு எதிராக வரிந்து கட்டி வந்து நின்றார் உடனடியாக மாகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு அதிரடியில் இறங்கும் அன்பில் மகேஷ். அரசு பள்ளிகளில் இருக்கும் பல ஓட்டைகளை சரிசெய்தால் நன்றாகஇருக்கும். அரசு பள்ளியில் உள்ள மாணவர்களைஅங்குள்ளஎ ஆசிரியர்கள் வேலை வாங்குவது வழக்கமாகி வருகின்றது. அப்போதெல்லாம் வாய் திறக்க மாட்டார் அன்பில் மகேஷ்,
சிவகங்கையில் உதயநிதி ஸ்டாலினின் வருகையை ஒட்டி, விளையாட்டு மைதானத்தை தூய்மை செய்யும் பணியில், விடுதி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்ட காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அந்த ஏரியாவுக்குள் செல்லவில்லை அன்பில்மகேஷ் அவர்கள். விளம்பரங்களால் மட்டுமே ஆட்சி செய்து வருகிறது இந்த திமுக அரசு என குற்றசாட்டுகள் எழுந்தது. மாணவர்களை இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்பதை பலமுறை வலியுறுத்தி வரும் போதிலும், அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான பணிகளில் மாணவர்களை அதிகாரிகள் ஈடுபடுத்தியது பெரும் பரபரப்பை கிளப்பியது.
இந்த நிலையில் பெரம்பலுார் மாவட்டம், அசூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் 156 மாணவ, மாணவியருடன் எட்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பள்ளிக்கு சென்றிருந்த மாணவர்கள் சிலரை, நேற்று முன்தினம் இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மூன்று பேர், தங்களது, டூ-வீலர்களை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய வைத்தனர்.இதை, அதே கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர், தங்களது மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்து, பரவ விட்டனர்.இது குறித்து கல்வி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, ஆசிரியர்கள் நான்கு பேர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்பழகன் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.