Wednesday, February 4, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

முடிவு பெற்றது இண்டி கூட்டணி… முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் நிதீஷ்குமார்.. மீண்டும் பா.ஜ.கவுடன்..

Oredesam by Oredesam
January 25, 2024
in செய்திகள்
0
india alliance

india alliance

FacebookTwitterWhatsappTelegram

பாராளுமன்ற தேர்தல் முடிவதற்குள் இண்டி கூட்டணி முடிந்து விடும் போல.. முடிந்து விட்டது என்றே கூறலாம்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதீத பலம் வாய்ந்த பா.ஜ.கவை எதிர்க்க அனைத்து எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள இண்டி கூட்டணியை யை முதலில் முதலில் ஆரம்பித்து வைத்தது பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தான்.

இந்த நிலையில் இண்டி கூட்டணியை உருவாக்கிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய உள்ளதாகவும் பீகார் சட்டசபையை கலைக்க பரிந்துரைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

இந்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இண்டி’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட எதிா்க்கட்சிகள்உள்ளது. இண்டி’ கூட்டணியின் நான்கு ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பாட்னா, பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெற்றன. மேலும் ஒரு கூட்டம் வீடியோ கான்பரசிங்க்கில் நடைபெற்றது

இந்த நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் பெயரை பரிந்துரை செய்தார். இதனால் நிதிஷ் குமார் தனது அதிருப்தியை டெல்லியில் காங்கிரஸ் சார்பில் சமீபத்தில் நடந்து முடிந்த இண்டி கூட்டணியில் வெளிக்காட்டினார்.

ஆனால் முதலில் இண்டி கூட்டணியை உதறியவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தான். இதுவரை 5 முறை ஆலோசனை நடத்திய நிலையில், ஆரம்பம் முதலே பெரிய அளவுக்கு ஆர்வம் காட்டாமல் இருந்தார் மம்தா பானர்ஜி.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில், மம்தாவிடம் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிக இடங்களை கேட்பதாக தகவல் வெளியானது. ஆனால், ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி வென்றுள்ள 2 இடங்களை மட்டுமே தர முடியும் எனக் கூறிய மம்தா, கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடத்தையும் கொடுக்க முடியாது என கூறிவிட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளார். மேலும், மேற்கு வங்க வழியாக ராகுல் காந்தி நடத்தும் யாத்திரை குறித்து தங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறினார்.மம்தா இல்லாமல் இந்தியா கூட்டணியை நினைத்துக் கூட பார்க்க முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

இந்த இடியை தங்குவதற்குள் அடுத்த இடியை இண்டி கூட்டணியில் இறங்கியுள்ளார் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார். ஆம் பீகார் மாநில சட்டசபை தேர்தல் 2020-ம் ஆண்டு நடைபெற்றது. அத்தேர்தலில் பாஜக, நிதிஷ்குமாரின் ஜேடியூ இணைந்து போட்டியிட்டன. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் லாலுவின் ஆர்ஜேடி கட்சி 75 இடங்களிலும் பாஜக 74 இடங்களிலும் நிதிஷ்குமாரின் ஜேடியூ 43 இடங்களிலும் வென்றது. பீகாரில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை. பாஜக, ஜேடியூ மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நிதிஷ்குமார் முதல்வரானார்.

ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன்னர் பா.ஜ.கவுடனான கூட்டணியை நிதிஷ்குமாரின் ஜேடியூ முறித்துக் கொண்டது. ஆர்ஜேடி, ஜேடியூ, காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் இணைந்து நிதிஷ்குமார் தலைமையில் புதிய கூட்டணி ஆட்சி அமைந்தது. இதனடிப்படையில்தான் லோக்சபா தேர்தலுக்கும் பாஜக அல்லாத அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து இண்டி கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் நிதிஷ்குமார் தீவிரம் காட்டினார். அப்படி உருவான இண்டி கூட்டணி இப்போது காங்கிரஸ் வசமாகிவிட்டது.

இந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு திடீரென பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என அறிவித்தது. இது பீகார் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது. பீகாரின் கக்கன், காமராஜர் என போற்றப்படுகிற மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் தலைவராக திகழ்ந்தவர் கர்பூரி தாக்கூர். அவருக்கு பாரத ரத்னா விருது கொடுத்ததால், பாஜகவையும் பிரதமர் மோடியையும் வானவளாவா புகழ்ந்து தள்ளினார் நிதிஷ்குமார்.

அத்துடன் நிற்காமல் போகிற போக்கில் வாரிசு அரசியலையும் வெளுவெளுவென வெளுத்துவிட்டார் நிதிஷ்குமார். முதலில் திமுகவை ஹிந்தி கற்க சொன்ன நிதிஷ் தற்போது வாரிசு அரசியலை வெளுத்து வாங்கியது காங்கிரஸ், லாலுபிரசாத், திமுகவை வெலவெலக்க செய்துள்ளது.

மேலும் இண்டி கூட்டணியில் காங்கிரஸுடனான உறவை மேற்கு வங்கத்திலும் பஞ்சாப்பிலும் முறித்து கொள்வதாக திரிணாமுல் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் அறிவித்திருக்கின்றன. இந்த நிலையில் நிதிஷ்குமாரின் இந்த திடீர் பாஜக பாசம், லாலு மீதான தாக்குதல்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பின.

: இதனிடையே பீகார் மாநில சட்டசபையை கலைப்பது தொடர்பாக நிதிஷ்குமார் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் “இண்டி ” கூட்டணியை உதறி தள்ளிவிட்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே மீண்டும் இணையவும் நிதிஷ்குமார் முடிவெடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. நிதிஷ்குமாரின் இந்த திடீர் நடவடிக்கைகள் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

rasipalan

இன்றைய இராசி பலன் 7.02.2024 புதன் கிழமை…. நல்லதே நடக்கும்..

February 6, 2024
இந்திய பிரதமர் மோடி மிரட்டுகின்றார் அமெரிக்க தொழிலதிபர் பேச்சால் பரபரப்பு.

இந்திய பிரதமர் மோடி மிரட்டுகின்றார் அமெரிக்க தொழிலதிபர் பேச்சால் பரபரப்பு.

September 24, 2021
70% Muslims trust PM Modi..74% Muslims support Ram temple....

பிரதமர் மோடி மீது 70% முஸ்லிம்கள் நம்பிக்கை..ராமர் கோவிலுக்கு 74% இஸ்லாமியர்கள் ஆதரவு…. வெளிவந்த ஆய்வு முடிவுகள்.

January 14, 2024
திமுக எம்.எல்.ஏ மிரட்டியதால் அப்பாவி முதியவர் தீக்குளிப்பு.

திமுக எம்.எல்.ஏ மிரட்டியதால் அப்பாவி முதியவர் தீக்குளிப்பு.

September 16, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x