கோவிலுக்கு சென்றதால் இஸ்லாமியர்கள் என்னை தோற்கடித்தார்கள்! இஸ்லாமிய சமூகம் பற்றி புட்டு புட்டு வைத்த தி.மு.க கவிஞர் சல்மா! வைரலாகும் வீடியோ!

மறைந்த எழுத்தாளர் தாமிரா கொரோனாவால் மரணம் அடைந்தார். இதன் இரங்கல் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமீர், விசிக ஷாநவாஸ் மேலும் திமுக எம்.பி. கனிமொழியின் தோழியுமான கவிஞர் சல்மா உள்ளிட்டோர் பேசினார்கள்

திமுக பொதுக்குழு உறுப்பினரும், திமுக எம்.பி. கனிமொழியின் தோழியுமான கவிஞர் சல்மா பேசுகையில்
கோவிலுக்குள் சென்றதால் என் முஸ்லிம் சமூகம் என் காலை வாரி தேர்தலில் என்னை தோற்கடித்தது! என கூறினார்.

மேலும் இஸ்லம் சமூகத்தில் நடக்கும் அவலங்களை எடுத்துரைத்தார். இது பெரும் பரபரப்பினை கிளப்பியுள்ளது. இஸ்லாமிய சமூகத்தில் இருந்து கொண்டு பொது வாழ்வில் எழுத்து துறையிலோ அல்லது இயக்குனராக வாழ்வது என்பது சிக்கலான ஒன்று.

இஸ்லாமிய சமூகத்தில் எல்லாமே ஹராம் கவிதை எழுதுவது தவறு கதை எழுதுவதும் தவறு படமெடுப்பது முழுக்க முழுக்க ஹராம் இதைத்தான் இஸ்லாமிய சமூகம் இன்னமும் புரிந்து கொண்டுள்ளது.

இஸ்லாமிய சமூகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனை புரிந்து கொள்ளாமல் இருப்பது தான் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் காஷ்மீர் சென்ற போது முக்காடு அணிந்து தொழுகை செய்வது போல் ஒரு புகை
படத்தை வெளியிட்டார் அதற்கு இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் பாராட்டுக்கள் தெரிவித்தார்கள் எனது மொபைல் ஆயிரக்கணக்கில் வாட்ஸ்அப் செய்தார்கள்.

ஒரு இந்து பெண் முக்காடு போட்டு கொண்டு தொழுகை செய்ததே இஸ்லாம் சமூகம் கொண்டாட்டத்திற்கு காரணம் .

இதே நானும் ஷானவாசம் மற்றொரு சமூகத்தில் இணைந்து பயணிக்கும் போதும், ஓட்டு கேட்கும் போது ஒரு கோவிலுக்குள் சென்று விட்டோம். இஸ்லாமியர்கள் மட்டும் ஒட்டு போட்டால் ஜெயித்து விட முடியுமா அனைவரும் நம்பித்தானே ஆகவேண்டும்

கோவிலுக்கு நான் சென்றதால் எனது இஸ்லாமிய சமூகத்தினர் என் காலை பிடித்து இழுத்து விட்டார்கள்.என்னை தோற்கடித்தார்கள். கோவிலுக்குள் சென்று ஓட்டு கேட்டால் உனக்கு ஓட்டு போட மாட்டோம் என்று இஸ்லாமிய சமூகம் என்னை தோற்கடித்தது.

இஸ்லாமிய சமூகத்தில் ஒருவர் வளர்ந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்கள் இசுலாமிய சமூகம்.
எனது சகோதரன் என்னிடம் வந்து தமிழச்சி தங்கபாண்டியன் தொழுகையை செய்ததை பார்த்தாயா என்று சொல்லி அதை பெருமிதத்தோடு சொன்னான்.

நான் அவனிடம் கேட்டேன் அவர்கள் நம் போன்று தொழுகை செய்தால் பெருமைப்படுகிறாய் நான் கோவிலுக்கு சென்றால் என்றால் ஏன் திட்டுகிறீர்கள் என கேட்டன். என்று இஸ்லாமிய சமூகத்தை பற்றி புட்டு புட்டு வைத்தார். கவிஞர் சல்மா!

Exit mobile version