அமலாக்க துறை வெளியிட்ட பட்டியல் கழிப்பறை முதல் கார்ப்பரேட் வரை எதையும் விட்டுவைக்காமல் திமுக அடித்த கொள்ளை..

அடுத்த 5 மாதத்தில் திமுக ஆட்சி நிறைவடைய இருக்கும் நிலையில், கடந்த நான்கரை ஆண்டு திமுக ஆட்சியில் நடந்த சாதனை என பட்டியலிட்டால், திமுக அமைச்சர்கள் அடித்த கொள்ளையும், தொடர்ந்து அவர்கள் அடித்த கொள்ளை குறித்து அமலாக்கத்துறை வெளியிட்டு வரும் ஆதாரங்களும் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த வகையில் திமுக அமைச்சர்கள் யாரெல்லாம் இன்னும் ஊழலில் சிக்கவில்லை என்பதை வேண்டுமானால் விரல் விட்டு எண்ணிவிடும் அளவுக்கு பெரும்பாலான திமுக அமைச்சர்கள் ஊழல் புகாரில் சிக்கி உள்ளனர்.

அந்த வரிசையில் தற்பொழுது அமைச்சர் கே என் நேரு சுமை ஆயிரம் கோடி அளவில் ஊழல் புகாரில் சிக்கியுள்ள தகவலை அமலாக்கத்துறை அம்பலப்படுத்தி இருக்கிறது. திமுக ஆட்சியில் துறை சார்ந்த அமைச்சர்கள், அவரவர் துறையில் ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் 7.5% முதல் 10% வரை கமிஷன் வாங்கி கொண்டு தான் ஒப்பந்தம் அளித்து வருவதாக குற்றசாட்டுகள் எழுத்துள்ளது.

கடந்த நான்கரை ஆண்டு திமுக ஆட்சியில் நடந்து ஊழலில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஒவ்வொரு பணியிடங்களுக்கும் 25 முதல் 35 லட்சம் லஞ்சம் பெற்றதில் சுமார் 888 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்து போக்குவரத்து துறையில் சுமார் 160 கோடி வரை ஊழல் நந்ததுள்ளது என்றும்,

அதாவது அரிசி ஏற்றி செல்லும் போக்குவரத்துக்கு அரசு நிர்ணயம் செய்த 598 கோடிக்கு பதிலாக வெறும் 186 கோடிக்கு மட்டும் போக்குவரத்து டெண்டர் கொடுக்கப்பட்டத்தில், சுமார் 160 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை மாநகராட்சி கழிப்பறை பராமரிப்பு தொடர்பாக சுமார் 364 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசு நிதி பற்றாக்குறையால் தவிக்கிறது,மத்திய அரசு போதுமான நிதியை தர மறுக்கிறது என குற்றசாட்டுகளை அடுக்கும் திமுக அரசு ஊழலில் உச்சமாக, பல கோடி சுருட்டி இருக்கும் தகவல் வெளியாகி திமுகவின் கபட நாடகம் அம்பலமாகி இருக்கிறது.

தமிழகத்தின் மொத்த கடன் 9.29 லட்சமாக அதிகரித்து சாதனை படைத்தது இருக்கிறது திமுக அரசு. இப்படி தமிழகத்தை கடனில் மூழ்கடித்து விட்டு திமுக அமைச்சர்கள் மட்டும் கோடி கோடியாக அடித்து அவர்களின் சொத்துக்களின் மதிப்பு பல கோடிக்கு உயர்ந்தது எப்படி என்கிற கேள்வியை மக்கள் கேட்க தொடங்கி இருக்கிறார்கள். கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக ஆட்சியில் நடந்த ஊழல் தான் தமிழகம் பெருமளவு கடனில் தள்ளப்பட்டதற்கு காரணம் என்றும்.
ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியை திமுக நடத்தி இருந்தால்,

பெருமளவு கடனில் இருந்து மீண்டுருக்கும் தமிழகம் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். தமிழக்தில் பல இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படவில்லை, மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி செய்யவில்லை, மாணவர்களுக்கு லேப்டாட் கொடுக்கவில்லை,

ஆனால் மக்களுக்கு சேரவேண்டிய பணம் எல்லாம் ஊழல் பணமாக திமுக அமைச்சர்களின் வீட்டின் கஜானாவில் சேர்ந்து இருக்கிறது என்பது அடுத்தடுத்து திமுக அமைச்சர்கள் ஊழலில் புகாரில் சிக்கி அம்பலப்படுத்தி கொண்டிருக்கிறது.

அந்த வகையில் கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக மிக சிறப்பாக இயங்கிய துறை எது என பாராட்டு தெரிவிக்க வேண்டும் என்றால் “கமிஷன், கலெக்ஷன் மற்றும் ஊழல் துறை” என மக்களே நேரடியாக திமுக அரசை விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version