உலக அளவில் மிகவும் மதித்து போற்றப்படும் நபர்கள் மோடி,தோனி, மேரி காம்,

‘யுகோவ்’. எனும் ஆராய்ச்சி நிறுவனம் பிரிட்டனை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி நிறுவனமானது சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வானது உலக மக்களால் மதித்து போற்றப்படும் ஆண்,பெண் யார்? என ஒரு கருத்து கணிப்பை மேற்கொண்டது.

இந்தியாவில் கருத்து கணிப்பை மேற்கொண்ட இந்நிறுவனம் மக்களால் அதிகம் போற்றப்படும் நபர்களில் பிரதமர் நரேந்திர மோடிமுதல் இடம் பெற்றார். மோடிக்கு 15.66 சதவீத ஓட்டுகள் கிடைத்துள்ளன. இரண்டாம் இடத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பெற்றார். தோனிக்கு 8.58% ஓட்டுகள் கிடைத்துள்ளது.

பெண்களிலும் இந்தியாவே முதல் இடம்

மதித்து போற்றப்படும் பெண் பிரபலங்களில்இந்தியாவை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை, மேரி கோம் முதல் இடம் பிடித்தார். இவருக்கு 10.36 சதவீத ஓட்டுகள் கிடைத்துள்ளது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version