கட்சியின் பெயர் அப்செட்டில் விஜய் புஸ்ஸி ஆனந்தத்தால் வந்த வினை…தமிழக வெற்றி கழகத்தில் கலகம்…

தற்போது தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர்ந்துள்ளது. அனைத்து கட்சிகளும் அதற்கான வேலைகளில் ஈடுபட துவங்கியுள்ளார்கள். தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகளும் உற்று நோக்கும் இளம் தலைவராக அண்ணாமலை அறியப்படுகிறார். அதற்கடுத்து 2026 ல் களம் காணும் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்யின் என்ட்ரியை உற்று கவனித்து வருகிறார்கள். இப்போதே கூட்டணி குறித்தும் பல கட்சிகள் பேச துவங்கியுள்ளது.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய், சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று அறிமுகம் செய்தார். கொடியில் சிவப்பு, மஞ்சள் நிற கொடியில் இரண்டு போர் யானைகளுக்கு நடுவே வாகை மலர் இடம் பெற்றுள்ளது. கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் அடங்கிய பாடலையும் வெளியிட்டார்.

ஆனால தற்போது அதிர்ச்சிகாரமான விஷயம் விஜயின் காதுக்கு எட்டியுள்ளதாம். இதனால் கடும் அப்செட்டில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் அரசியல் வித்தியாசமானது. தமிழர்கள் அதிகமாக வாழும் தமிழகத்தில் தமிழின் பெயர் தாங்கி வந்த அரசியல் கட்சிகள் அனைத்தும கால்பதிக்க முடியாமல் ஊத்தி மூடிய வரலாறு தான் இன்று வரை உள்ளது.

சி.பா ஆதித்தனாரால் 1942 ல் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் ராஜ்ஜியம் என்ற இயக்கமும் அதற்கு பிறகு 1958 ல் அவராலே ஆரம்பிக்கப்பட்ட நாம் தமிழர் இயக்கமும் பெயரளவில் தான் இருந்ததே தவிர சொல்லி கொள்ளும் வெற்றி பெற முடியாமல் திராவிட இயக்கங்களின் கைகளுக்கு சென்றது.

தமிழர் தந்தை என அறியப்பட்டவர் சி.பா ஆதித்தனார் ஆனால் அவரால் தொடங்கப்பட்ட தமிழர் ராஜ்ஜியம் இயக்கம் இழுத்து மூடப்பட்டு திமுகவில் ஐக்கியமாகி தன்னுடைய அமைச்சர் கனவை நிறைவேற்றி கொண்டு தமிழக அரசியலில் தமிழ் இயக்கங்களின் பங்களிப்பை மரணிக்க வைத்து விட்டார் 1946 ல் நம்முடைய சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்களால் தொடங்கப்பட்ட தமிழரசு கழகமும் தமிழக எல்லை காக்கும் போராட்டங்களில் வெற்றி பெற்றதே தவிர அரசியலில் வெற்றி பெற முடியவில்லை.

1961ல் திமுகவில் இருந்து விலகிய சொல்லின் செல்வர் ஈ.வெ.கே.சம்பத் தமிழ் தேசிய கட்சி என்ற ஒன்றை ஆரம்பித்து 1962ல் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்து பின் காங்கிரசுக்குள் ஐக்கியமா கிவிட்டார். அதற்கு பிறகு 1989 ல் நம்ம நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தமிழக முன்னேற்ற முன்னணி ஆரம்பித்த அதே வருடத்தில் படு தோல்வியடைந்து ஆரம்பித்த சுவடே தெரியாமல் அந்த வருடமே ஊத்தி மூடியது.

ஆதித்தனாரிடம் இருந்த நாம் தமிழர் கட்சியை சீமான் எடுத்து நடத்தி வருகிறார்.சீமானே எந்த ஒரு தொகுதியிலும் ஜெயிக்க முடியாது என்கிற பொழுது அவரின் கட்சியை பற்றி சொல்லவேவேண்டாம்.எத்தனை வருடங்கள் நாம் தமிழர் கட்சி உயிருடன் இருந்தது என்பது மட்டுமே சீமானின் சாதனையாக இருக்க முடியும்.
வேல்முருகன் அவர்களின் தமிழக வாழ்வுரிமை கட்சியை பற்றி பேசி சொல்ல தேவையில்லை. தமிழ் மாநில காங்கிரஸ் உட்பட இதுவரை தமிழ்நாட்டில் தமிழ் பெயர் தாங்கிய எந்த இயக்கமும் பெயரளவில் கூட சாதிக்க முடியாததால் அடுத்து கட்சி தொடங்கிய திமுக அதிமுக மதிமுக தேமுதிக என அனைவரும் பெயரில் கூட தமிழை தவிர்த்தே வந்தனர்.

இப்பொழுது அதே வரிசையில் வந்து நிற்கிறது தமிழக வெற்றி கழகம் ஆரம்பம் முதலே அந்த பெயரில் பிரச்சனை தான் முதலில் தமிழக வெற்றி கழகம் அடுத்து க்கு வைத்து கட்சி பெயர் என குழப்பத்தில் தான் பெயர் வைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் பெயர் கொண்ட கட்சிகளின் வரலாறு குறித்த விஷயம் நடிகர் விஜய் காதிற்கு எட்டியுள்ளது இதனால் கடும் அப்செட்டில் உள்ளாராம் மேலும் கட்சி பெயர் முதல் கொடி வரை அனைத்தையும் கவனித்து வந்த புஸ்ஸி ஆனந்தை அழைத்து கடிந்து கொண்டாராம் விஜய். முதலில் பெயரில் பிரச்சனை தற்போது கொடியிலும் பிரச்சனை என்ன தான் செய்வது சீனியர் அரசியல் நிபுணர்களை பக்கத்தில் வைத்து கொண்டு வேலை செய்யுங்கள் மேலும் நிர்வாகிகளை மட்டும் நீங்கள் கவனித்து கொள்ளுங்கள் என கூறியுள்ளாரம் தமிழக வெற்றி கழகத்தில் தற்போதே கலகம் ஆரம்பித்து விட்டதாம் ..

Exit mobile version