அடுத்த விக்கெட் காலி.. இண்டி கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி : எதிர்பார்க்காத ட்விஸ்ட்…

INDI ALLIANCE

INDI ALLIANCE

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே இண்டி கூட்டணயின் கூடாரம் காலியாகி விடும் போல.. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதீத பலம் வாய்ந்த பா.ஜ.கவை எதிர்க்க அனைத்து எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள இண்டி கூட்டணியில் எந்த கட்சி உள்ளது எந்த கட்சி விலகியது என அவர்களே தெரியாது.. அந்த அளவிற்கு சுக்குநூறாக உடைந்தது இண்டி கூட்டணி.

இண்டி கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு இல்லை, அதிருப்தி, கருத்து வேறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒவ்வொரு கட்சியும் கூட்டணியை விட்டு விலகி வருகிறது. யார் பெரிய ஆள் என அவர்களுக்குள்ளேயே அடித்து கொண்டு வெளியேறி வருகிறார்கள். மேலும் விலகிய கட்சிகள் தனித்து போட்டி எனவும் பாஜகவுடன் கூட்டணிக்கு சென்று விடுகிறார்கள்.

அந்தவகையில் கடந்த மாதம், இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்குவங்கத்தில் தனித்துதான் போட்டியிடும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார்.இதையடுத்து, பஞ்சாப் அசாம் டெல்லி மாநிலங்களில் ஆம் ஆத்மி தனித்து போட்டி என கெஜ்ரிவால்அறிவித்தார். இண்டி கூட்டணி உருவாக முக்கிய பங்காற்றிய பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், அதிருப்தி காரணமாக அந்த கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜகவுடன் இணைந்து முதல்வரானார்.

அதை தொடர்ந்து முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பேரனும், முன்னாள் மத்திய அமைச்சர் அஜித்சிங்கின் மகன் ஜெயந்த் சவுத்ரி. இவர் ராஷ்ட்ரீய லோக்தள கட்சி தலைவராக உள்ளார். இக்கட்சி ‛ இண்டி கூட்டணியில் அங்கம் வகித்து வந்தது. உத்திர பிரேதேசத்தில் சில தொகுதிகளில் இக்கட்சிக்கு செல்வாக்கு உள்ளது இந்த கட்சியும் இண்டி கூட்டணியிலிருந்து விலகி பாஜகவுடன் இணைந்தது

இது, போதாது என்று இண்டி கூட்டணியில் இருந்த தேசிய மாநாட்டு கட்சி எஸ்கேப் ஆகிவிட்டது . மக்களவை தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் உள்ள 5 தொகுதிகளிலும் தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். மம்தா, கெஜ்ரிவாலை நிதிஷ் தொடர்ந்து தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் தனித்து போட்டிவிடுவதாக அறிவித்துள்ளார்.

இந்த கட்சி காங்கிரசை விட்டு போகாது இஸ்லாமிய வாக்குகள் அதிகம் உள்ளதால் வெளியேறது என நினைத்திருந்த காங்கிரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார். தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா.இது எதிர்ப்பார்க்காத ட்விஸ்ட்

Exit mobile version