நிர்மலா சீதாராமன் போட்ட உத்தரவு … அதிர்ந்த அரசியல் கட்சிகள்… முக்கிய முடிவை எடுத்த மத்திய அரசு….

Modi Nirmala

Modi Nirmala

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் நேற்று துவங்கியது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இதன்பின், பொருளாதார ஆய்வறிக்கையை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 436 பக்கங்கள் அடங்கிய அந்த அறிக்கையில், தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிக்க என்ன செய்யலாம் என்ற பரிந்துரைகள், ஆலோசனைகள் இடம் பெற்றுள்ளன.நாட்டில் தொழில் மற்றும் வர்த்தக துறை மேலும் வளர்ச்சி அடைய வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு அது மிகவும் அவசியம்.
தொழில் நடத்துபவர்கள் தங்கள் இலக்கை அடைவதற்கு முழு கவனம் செலுத்த வசதியாக, அதிகாரிகள் வாயிலாக தொல்லை கொடுக்காமல் அரசு ஒதுங்கி நிற்க வேண்டும்’ என்று, மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அளவுக்கு அதிகமான உரிம கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளை தளர்த்தும்பட்சத்தில், வர்த்தகம் செய்வதற்கான செலவு குறையும். அதிகப்படியான கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள், தொழில் முனைவோரின் முதலீட்டு ஆர்வத்தை குறைத்து விடும்.

தொழில் துவங்குவதற்கான நடைமுறைகளையும், செலவுகளையும் அரசு குறைப்பதன் வாயிலாக, பொருளாதார வளர்ச்சி வேகம் பெறும். இதுவரை காணாத உலகளாவிய பிரச்னைகளை தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சந்தித்து வரும் சூழலில், சவால்களை சமாளித்து, வேலைவாய்ப்பை அதிகரிக்க இது உதவும்.தொழில்கள் தங்களது இலக்கை அடைவதற்கு முழு கவனம் செலுத்த அனுமதிக்கும் வகையில், அவற்றுக்கு குறுக்கே நிற்காமல், அரசு விலகி நிற்க வேண்டும். புவிசார் அரசியல் பிரச்னைகள், நிச்சயமற்ற வர்த்தக நிலைகள், தங்கம், கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய் போன்ற இறக்குமதி பொருட்களின் விலையில் ஏற்படும் அதிர்வுகள் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ள தொழில் துறையினருக்கு அரசு பக்க பலமாக இருக்க வேண்டுமே தவிர, தடங்கல் ஏற்படுத்தக் கூடாது.இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.இந்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை பார்லிமென்டில் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். இதில், பெண்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் தொழில் துறையினரை கவரும் வகையிலான அறிவிப்புகள் இருந்து வருகிறது. மூத்த குடிமக்களுக்கான வட்டி வருமானத்துக்கு வழங்கப்படும் டிடிஎஸ் வரி விலக்கு வரம்பு 1 லட்சம் ரூபாயாக உயர்வுவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிப்புவீட்டு வாடகைக்கான TDS உச்சவரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டு சொந்த வீடுகளுக்கு வரிச் சலுகைரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை
இந்த அறிவிப்பு நடுத்தர வர்கத்தினருக்கான மிக முக்கிய அறிவிப்புகளாகும். டெலிவரி செய்யும் நபர்களுக்கு இலவச இன்சூரன்ஸ் போன்ற திட்டங்களும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் தொழில் துறையினருக்கு அரசு பக்க பலமாக இருக்க வேண்டுமே தவிர, தடங்கல் ஏற்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ள நிர்மலாசீதாராமன் இதற்கென தனி அமைப்பை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒரு இடத்தில் தொழில் தொடங்கவேண்டும் என்றால் அந்த ஏரியா வட்டம்,மாவட்டம், தலைமை குடும்பம், ஏரியா கவுன்சிலர், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள்,காவல்துறையினர், மின்துறை வடிகால் துறை, பெர்மிஷன் என பல்வேறு தரப்பினரை சமாதானம் செய்ய வேண்டும். அதற்குள் தொழில் தொடங்குவதற்கான ஆசையே போய்விடும். இதற்கிடையே இதற்கு முடிவு கட்டவேண்டும் என்பதற்காக புதிய தொழில் தொடங்க ஆசைப்பட்டவர்களுக்கு தனி அமைப்பை உருவாக்கி அந்த அமைப்பின் மூலம் எல்லா பெர்மிஷன்களும் வாங்க புதிய தொழில் முனைவோருக்கான சட்டத்தை உருவாக்க உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மேலும் தொழில்முனைவோரிடம் லஞ்சம் பெறுபவர்கள் மீது புகார் கொடுக்கவும் தனி இணையதளம் உருவாக்கப்பட முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

Exit mobile version