ஜிஎஸ்டி எனும் மாபெரும் சமூகநீதிச்சட்டம். இப்பத்தான் இதுக சம்முவநீதி கொண்டாடுதே ஜிஎஸ்டி கொண்டு வந்த சமூகநீதி என்ன என பார்ப்போமா?
1. ஜிஎஸ்டி வந்தபின்பு அரசியல்வியாதிகள் அவிங்க இஷ்டத்துக்கு வரிபோடுவது நின்றது. முன்பெல்லாம் ஞாபகம் இருக்கா? பட்ஜெட் என வந்தா உடனே எதுக்கு எவ்வளவு வரின்னு உக்காந்து கேட்டுட்டு இருப்போம். அடுத்த நாள் பேப்பரிலே எது எதுக்கு எவ்வளவு வரின்னு தேடி எடுத்து வைக்கவேண்டியதும் இருந்தது. முன்னெல்லாம் இந்த வரியை வைச்சு ஏமாத்துன நிகழச்சிகளை படிக்கவே மலைப்பா இருக்கும். இன்னைக்கு? யோசிச்சுப்பாருங்க. தமிழக மாநிலம் இருக்கும் நிலையிலே ஜிஎஸ்டி இல்லாம இருந்திருந்தா விடியலிதுமடியல் கோஷ்டிக எப்படி வரி போட்டிருக்கும்? ஓட்டுப்போட்ட பொதுமக்களை அடிமைகளாக நினைத்து வரிபோட்டுக்கொண்டிருந்ததை நிறுத்தியது தான் நமது பாரத பிரதமர் நரேந்திரதாஸ் மோடி செய்த உண்மையான ஒரிஜினல் சமூகநீதி திட்டம் சமத்துவத்தை காப்பாத்தும் சட்டம்.
2. எளிய சிறு, குறு, நடுத்தர வியாபாரிகள் லஞ்சம் கொடுப்பதே ஒழிந்தது ஜிஎஸ்டி வந்த பின்பு தான். ஜிஎஸ்டிக்கு முன்பு எப்படியிருந்தது? சேல்ஸ்டாக்ஸ் நம்பர் வாங்கனுமின்னா லஞ்சம்பதிவு செய்யனுமின்னா லஞ்சம்ஆடிட் செய்யனுமின்னா லஞ்சம்செக்போஸ்ட் அதாங்க சோதனை சாவடிகளிலே லஞ்சம்இன்ஸ்பெக்சன் வந்தா லஞ்சம். டாக்ஸ் பதிவு செய்ய லஞ்சம். எதை செய்யனுமின்னாலும் எங்க செய்யனுமின்னாலும் எப்படி செய்யனுமின்னாலும் லஞ்சமோ லஞ்சம். அதை ஒழித்து ஏழை எளிய சிறு குறு நடுத்தர வியாபாரிகளுக்கு லஞ்சம் ஊழலிலே இருந்து விடுதலை அளித்த சமூக நீதி தான் ஜிஎஸ்டி எனும் சட்டம்.
3. வியாபாரிகள் இந்த அரசியல்வியாதிகளுக்கு பயந்து அரசியலிலே பங்கெடுக்கமுடியாதது ஒழிந்ததும் ஜிஎஸ்டியால்ஜிஎஸ்டிக்கு முன்பு சேல்ஸ் டாக்ஸ் வரி வசூல் யார் கையிலே இருந்தது? மாநில அரசிடம். மாநில அரசை கட்டுப்படுத்தியது யார்? உள்ளூர் அரசியல்வாதிகள். வியாபாரிகள் உள்ளூர் அரசியவியாதிகளுக்கு பணிந்து கப்பம் கட்டாவிடில் என்ன நடக்கும்? சேல்ஸ்டாக் ரெய்டு வரும். இப்போது? அந்த பயமே இல்லை. தமிழகத்திலே பாஜகவுக்கு இருக்கும் ஆதரவு எங்கிருந்து வருகிறது? ஏன் அந்த ஆதரவு முன்பு இல்லை என்றால் இதனால் தான். இந்த அரசியல்வியாதிகள் எல்லா மாநிலங்களிலேயும் வாலறுந்த எலி போல குதிப்பதும் நல்ல அடிமைகளாக நடந்து கொண்டிருந்த வியாபாரிகள் கைவிட்டு போய்விட்டார்களே என்பதால் தான்.
4. அரசு அலுவலர்கள் என பொதுமக்களை அடிமைகளாக நடத்தியது ஒழிந்ததும் ஜிஎஸ்டியால்ஜிஎஸ்டிக்கு முன்பு அரசு அலுவலர்கள் மக்களை எப்படி நடத்தினார்கள்? வியாபாரிகளை எப்படி நடத்தினார்கள்? விலங்குகளை விட மோசமாகத்தானே? லஞ்சம் கொடுத்தாலும், கேட்டவற்றை கொடுத்து கவனித்தாலும் ஆயிரம் முறை சார் போட்டு கூப்பிடவேண்டும். போய் நின்று தலையை சொரிய வேண்டும். கையிலே காலிலே விழுந்துஅரசியல்வியாதி சிபாரிசு பிடிச்சு போனாத்தான் வேலையே நடக்கும். இதுவே செக்போஸ்டிலெ என்றால் கேக்கவேண்டாம். பணம் கைமாறினாலும் வேணுமின்னே பத்துநாளுக்கு காக்க வைப்பாங்களே? இப்போது? ஜிஎஸ்டி வந்தபின்பு. அரசு ஆப்பீசர்ஸ் எல்லாம் பல் பிடுங்கப்பட்ட பாம்பு போல பம்மிக்கொண்டு இருக்கிறார்களே? எப்படி?
5. பதுக்கல், கள்ளச்சந்தை ஒழிந்ததும் ஜிஎஸ்டியால்இந்த சேல்ஸ் டாக்ஸ் இருக்கும்போது வாரா வாரம் இந்தா ரெய்டு இங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்த இவ்வளவு மூட்டைகள் கைப்பற்றப்பட்டன தெனம் தெனம் படிப்போமோ அப்படி ஏன் இப்போ வர்றதில்லே? அரிசி, கோதுமையிலே ஆரம்பிச்சு வெங்காயம், பூண்டு வரைக்கும் பதுக்கு பதுக்குன்னு பதுக்கி வைச்சிருந்தாங்களே அவிங்க எல்லாம் திருந்திட்டாங்களா? நாட்ட விட்டு போயிட்டாங்களா? இல்லை. இப்போது அதெல்லாம் செய்யமுடியாது. ஏன்னா ஜிஎஸ்டியிலே எல்லாத்துக்கும் கணக்கு உண்டு. யார் யாருகிட்டே வாங்கறாங்க யாரு யாருகிட்டே விக்கறாங்க என எல்லாம் சங்கிலி தொடராக கணக்கு உண்டு. அதனாலே ஒருத்தர் வாங்கி பதுக்கினாலும் அதை வித்தவர் ஜிஎஸ்டியிலே பதிவேற்றும்போது கணக்கு வந்தாகனும். இப்படி இருக்கும்போது எப்படி பதுக்கறது? எங்கே பதுக்கறது? சரி இந்த எல்லாருமே சேர்ந்து ஏமாத்தினா அப்படீன்னா அதுவும் முடியாது. அதுக்கு ஜிஎஸ்டியிலே ஒருத்தருமே பதிவு செய்யாம இருந்தால் ஒழிய அதாவது ஜிஎஸ்டியே இல்லாமல் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். தொடர் சங்கிலியாக இது போவதால் எப்படியும் ஒரு கண்ணியிலே மாட்டியே ஆகவேண்டும்.
6. வரி ஏய்ப்பை தடுத்து கள்ளப்பணம், ஊழல் ஒழிந்ததும் ஜிஎஸ்டியால்சேல்ஸ் டாக்ஸ் என இருக்கும்போது எப்படி வரி கட்டியது நடந்தது? பில் போட்டத எல்லாம் ஆப்பீஸுக்கு போனதுக்கு அப்புறம் திரும்ப எடுத்துட்டு வந்துடலாம் என்ற அளவுக்கு தானே இருந்தது? செக்போஸ்டிலே தள்ளவேண்டியத தள்ளினா என்ன பில் வேண்ணா போட்டு எழுதிக்கலாம். அப்போ அரசுக்கு முறையாக கிடைக்கவேண்டிய வரி?அரசுக்கு வரும் முக்கியமா? கவர்மெண்ட் ஆப்பிஸருக்கு கிடையக்கவேண்டியது முக்கியமா? இப்படி அமோகமாக போய் கொண்டிருந்ததுக்கு ஆப்பு வைச்சது தான் ஜிஎஸ்டி. எல்லாம் கணினி மயம். எங்கேயும் எதையும் மறைக்கமுடியாது. செக்போஸ்ட் இல்லாமலே இதை கண்டுபிடிச்சிடலாம். கட்டும் வரியெல்லாம் ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்களுக்கே போவும். இதை விட ஏழை எளிய மக்களுக்கு சமூகநீதியை வழங்கிய சட்டம் ஏதேனும் உண்டா?
7. டிஜிட்டல் இந்தியாவால் இருக்கும் இடத்திலே இருந்தே வரி கட்ட வழி செய்தது ஜிஎஸ்டி தான்சேல்ஸ்டாக்ஸ் எல்லாம் இருக்கும்போது அந்த சேல்ஸ்டாக்ஸ் பதிவு செய்ய விண்ணப்பபடிவம் வாங்க அலையனும்.அதை பூர்த்தி செஞ்சு கொடுத்து அது அப்புரூவ் ஆச்சா ஆச்சா என பார்த்துகேக்குறதிலே எல்லாம் கையெழுத்து போட்டு அப்புரூவல் வாங்குறதுக்கு உள்ளே போதும் போதும் என ஆயிடும். ஆனா இப்போ? எல்லாம் ஜிஎஸ்டி போர்ட்டல் வழியாகவே. நாமளே பண்ணிக்கலாம். இருந்த இடத்திலே இருந்தே செய்யலாம். எந்த ஒரு செலவும் இல்லை. முன்ன மாதிரி விண்ணப்பபடிவம் தொலஞ்சு போவது, காணாம போவது எல்லாம் கிடையாது. எல்லாம் ஆன்லைன்.இருந்த இடத்திலே இருந்தே.எல்லாவற்றிகும் பதிவு உண்டு. எதையும் யாரும் அழிக்க முடியாது. இதுக்கும் மேலே என்ன ஒரு சமூக நீதி இருக்கமுடியும்?
8. பொதுமக்களுக்கு விலை குறைவாக பொருட்கள் கிடைத்ததும் ஜிஎஸ்டியால்இதனால் எல்லாம் என்ன பலன்? பொதுமக்களுக்கு தரமான பொருட்கள் குறைந்த விலையிலேயே கிடைக்கிறது. பதுக்கல் இல்லை. செயற்கையான தட்டுப்பாடு இல்லை. வரிக்கு வரி இல்லை. மாநிலத்துக்கு மாநிலம் வேற வேற வரி என்ற பிரச்சினை இல்லை. இதைப்போல ஒரு சமூக நீதிதிட்டம் என உண்டா? எனவே ஜிஎஸ்டியை கொண்டு வந்த மோடியும் ஜெட்லீயும் தான் உண்மையான சமூகநீதிப்போராளிகள். உண்மையான சமூகநீதிக்காவலர்கள்.
நரேந்திரதாஸ் மோடியையும்,அருண் ஜெட்லீயையும் கொண்டாடுவதே உண்மையான சமூகநீதி நாளாக இருக்கமுடியும்.இதை திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் ஒத்துக்கொள்வாரா.
கட்டுரை வலதுசாரி சிந்தனையாளர் ராஜசங்கர் விசுவநாதன்.