அக்னி கலசத்திற்கு பதில் உதயசூரியன்.. குரு பெயருக்கு பதில் ஸ்டாலின்.. சூர்யாவுக்கு தைரியம் இருக்கா?காடுவெட்டி குரு மகன் கனலரசன்!

ஜெய்பீம் திரைப்படம் ம் தற்போது பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது,.மேலும் மேலும் வன்னியர் வன்னியர் சங்கங்கள் சங்கங்கள் நடிகர் சூர்யாவை விடுவதாக தெரியவில்லை. மேலும் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை ஓய்வதாக வன்னியர் சங்கங்கள் ஓய்வதாக தெரியவில்லை.

தமிழகம் முழுவதும் ஜெய் பீம் பட தயாரிப்பு குழு மீது வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகிறது . இந்த நிலையில் காடுவெட்டி குரு மகன் கனலரசன் களத்தில் இறங்கியுளளதால் பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. சூர்யா இதை வைக்க முடியுமா? அக்னி கலசத்திற்கு பதில் உதயசூரியன்.. குரு பெயருக்கு பதில் ஸ்டாலின்.. வைக்க தைரியம்உள்ளதா என்று சூர்யாவை நோக்கி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மேலும் ஜெய் பீம் திரைப்படம் ஜாதி சண்டையை தூண்டும் விதமாக எடுக்கப்பட்டுள்ள படம் என தற்போது தெரியவந்துள்ளது. மேலும் திட்டமிட்டு பார்வதியை ஏமாற்றி உள்ளார்கள். பாமர மக்களின் வாழ்க்கையை எடுத்து அதில் பணம் சம்பாதிக்கும் வழியினை சூர்யா மற்றும் பல இயக்குனர்கள் தற்போது கையாண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜெய்பீம் திரைப்படத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் தொலைபேசியில் பேசும்போது அதன் பின்னணியில் வன்னியர் சங்கத்தின் சின்னமான அக்னி கலசம் ஒரு காலண்டரில் இடம் பெற்றிருந்ததாக சர்ச்சை எழுந்தது.

சப்-இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திற்கு குரு மூர்த்தி என்ற பெயர் சூட்டப்பட்டிருந்ததும், அக்னி கலசம் காலண்டரும் இணைத்து பார்க்கப்பட்டு இது காடுவெட்டி குருவை மறைமுகமாக விமர்சனம் செய்வதை போல இருக்கிறது என்று வன்னியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது.

காடுவெட்டி குரு மகன் கனலரசன் ஒரு வீடியோ பதிவில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருக்கிறார். ஜெய்பீம் திரைப்படத்தில் பெரும்பான்மையான சமூகமான வன்னியர் சமூகத்தை மோசமாக சித்தரிக்கும் வகையில் காட்சி அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. அக்கினி கலசம் படம், வில்லன் வீட்டு காலண்டரில் வைக்கப்பட்டு இருக்கிறது. இதை தட்டி கேட்டால் கருத்து சுதந்திரம் என்று பதில் சொல்கிறார்கள்.

கருத்து சுதந்திரம் பேசுகிற இயக்குனர் ஞானவேல் அல்லது நடிகர் சூர்யா யாராக இருக்கட்டும் உங்களிடம் நான் ஒன்று கேட்கிறேன். உங்களுக்கு தைரியம் இருந்தால் வன்னியர் சங்கம் கலசத்திற்கு பதிலாக அங்கு உதயசூரியன் காலண்டர் அல்லது இரட்டை இலை படம் வரைந்த காலண்டர் வைக்க முடியுமா. குரு என்ற பெயருக்கு மாற்றாக ஸ்டாலின் அல்லது எடப்பாடி பழனிசாமி என்று பெயர் சூட்ட முடியுமா. இதை செய்யத் துணிவு கிடையாது உங்களுக்கு. அந்த இடத்தில் வன்னியர் சங்க காலண்டரை வைத்துவிட்டு வில்லன் கதாபாத்திரத்திற்கு குரு என்று பெயர் சூட்டுவது மட்டும் எப்படி நியாயமாகும்

உண்மையிலேயே இந்த படத்தை நீங்கள் ஒரு நல்ல கண்ணோட்டத்துடன் எடுத்து இருந்தால் பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாவை சந்தித்து அவரிடம் அனுமதி பெற்றிருக்கவேண்டும். மொத்தத்தில் நீங்கள் செய்திருப்பது திருட்டுத்தனம். இது அனைவருக்குமே தெரிகிறது. நீங்கள் நியாயமாக இருந்தால் உங்கள் லாபத்தில் சரிபாதியை பார்வதிக்கு கொடுக்க வேண்டும். இவ்வாறு கனலரசன் அந்த வீடியோ பதிவில் தெரிவித்து இருக்கிறார்.

Exit mobile version