ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள பஹல்காமை அடுத்த பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் இயங்கி வரும் ரிசார்ட்டில், வெளிநாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் புல்வெளியில் குதிரை சவாரி உள்ளிட்ட கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு நுழைந்த பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது ஈவு இரக்கமின்றி கண்டுமூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். தீவிரவாதிகளில் சிலர் கையில் சிக்கியவர்களிடம் என்ன மதம் என்று கேட்டு தாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்
இந்த கொடூரத் தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்ளிட்ட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூரமான தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய ரெசிஸ்டன்ஸ் பிரெண்ட் பொறுப்பேற்றுள்ளது.இதற்கிடையே தமிழகம், மகாராஷ்டிராவை சேர்ந்தவர் உள்பட மொத்தம் 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு சயீத்தின் லஷ்கர் இ-தொய்பா இன் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன் ஃப்ரண்ட் எனும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில்தான் இந்த தாக்குதல் நடந்தது. இங்கு காடுகள், ஏரிகள், புல்வெளிகள் காணப்படும். இந்த இடத்திற்கு நடந்தோ அல்லது குதிரை மூலமாகவோத்தான் செல்ல முடியும். இங்குச் சென்ற சுற்றுலா பயணிகளைத்தான் தீவிரவாதிகள் மிக நெருக்கமாக இருந்து சுட்டுக் கொன்றனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் கடந்த 16 ஆம் தேதி திருமணமான இந்திய கடற்படை அதிகாரி தனது மனைவியுடன் ஹனிமூன் சென்ற போது தீவிரவாத தாக்குதலில் இறந்தார். திருமணமான 6 நாட்களில் கணவனை இழந்த அந்த பெண், கதறி அழுத காட்சிகள் காண்போரை கலங்கச் செய்தது. பின்னர் கணவரின் உடலுக்கு ஜெய்ஹிந்த் என சொல்லி அஞ்சலி செலுத்தினார்.காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த நெல்லூர் பொறியாளரின் உடலை பார்த்து கதறி அழுத மகனை பார்ப்போர் மனமும் கலங்கியது. கடைசியாக ஐ லவ்யூ நானா என சிறுவன் சொன்னது… மனதை பிசைகிறது.அந்த வகையில் ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்த பொறியாளர் ஒருவரும் இறந்தார். ஆந்திராவை சேர்ந்தவர் சோமிசேட்டி மதுசூதனன். இவர் தனது மனைவி , இரு குழந்தைகளுடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தார்.அங்கு நடந்த தீவிரவாத தாக்குதலில் மதுசூதனன் உயிரிழந்தார். அவருடைய உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அவரது மனைவி, மகள் மேது, 8ஆம் வகுப்பு படிக்கும் மகன் தத்து ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது மகன் தத்து அழுத காட்சியை கண்டவர்களும் கலங்கி போனார்கள். நானா நானா என அழுதார். பின்னர் தனது தந்தையின் உடலுக்கு முத்தம் கொடுத்தார். அவரை உறவினர்கள் தேற்றி அந்த இடத்திலிருந்து அழைத்து செல்ல முயன்றனர்.ஆனாலும் தந்தையை விட்டு பிரிய மனமில்லாத சிறுவன் தத்து, உம்மா உம்மா என முத்தம் கொடுத்து அழுதான். பின்னர் உடனிருந்தவர்களும், தாயும் அந்த சிறுவனை அழைத்து சென்றனர். அப்போது ஐ லவ் யூ நானா என அவன் சொன்னது அனைவரின் மனதையும் பிசைந்து கண்களை குளமாக்குகிறது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















