மோடி மற்றும் அமித்ஷா நெருப்பாற்றில் நீந்தி வெற்றி கண்ட இருபெரும் தலைவர்கள் – வானதி சீனிவாசன்

குஜராத் கலவரத்தில் அப்போதைய முதல்வர் திரு. நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை என்ற சிறப்பு விசாரணை குழுவின் (SIT) முடிவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கரசேவகர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டது. இதில் 59 பேர் உடல் கருகி பலியானார்கள். அதனை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் மதகலவரம் மூண்டது.59 ராம பக்தர்கள் உயிருடன் எரிக்கப்பட்டது பற்றி கவலைப்படாதவர்கள், அதன் காரணமாக நடந்த கலவரத்திற்கு, மாநில அரசையும், அன்றைய முதல்வர் திரு. நரேந்திர மோடியையும், எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும், சமூக சேவகர் என்ற போர்வையில் உலா வருவர்களும், சில என்.ஜி.ஓ.,க்களும் குற்றவாளி கூண்டில் நிறுத்தின.எந்த மாநிலத்திலும், எதற்காகவும் கலவரம் நடந்தாலும் அதனை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட யாராலும் ஏற்க முடியாது. அதுவும் உயிர்ப்பலி என்பதை எக்காரணத்தை கொண்டும் ஏற்க முடியாது. கலவரத்தை தூண்டி விடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு.

ஆனாலும், 2002-ல் குஜராத் முதல்வராக இருந்த திரு. மோடி தலைமையிலான அரசு, மூன்று நாட்களுக்குள் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது. அதன்பிறகு, கடந்த 20 ஆண்களில் குஜராத்தில் எந்தவொரு கலவரமும் இல்லை. அந்த அளவுக்கு சட்டம் – ஒழுங்கை பராமரிப்பதில் குஜராத் பாஜக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.குஜராத் மட்டுமல்லை, இந்தியாவின் பல மாநிலங்களில் எத்தனையோ கலவரங்கள் நடந்திருக்கின்றன. இதே குஜராத்திலேயே காங்கிரஸ் ஆட்சியின்போதும், கலவரம் நடந்திருக்கிறது. இதற்காக அன்று இருந்த காங்கிரஸ் முதல்வரை யாரும் குற்றவாளியாக்கவில்லை.1998 காலகட்டத்தில் தமிழகத்தின் கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பும், போக்குவரத்து காவலர் செல்வராஜ், பயங்கரவாதிகளில் கொல்லப்பட்டதை தொடர்ந்து நடந்த கலவரமும் யாராலும் மறக்க முடியாத கருப்பு பக்கங்கள். இதற்காக, அன்றைய முதல்வர் திரு. கலைஞர் கருணாநிதியை யாரும் பொறுப்பேற்கச் சொல்லவில்லை.

ஆனால், குஜராத் கலவரத்தை முன்வைத்து, மோடியை அரசியலில் இருந்தே அகற்ற, 2004 முதல் 2024 வரை, மத்தியில் அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டது. பாஜக எதிர்ப்பு சமூக ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள், ஊடகத்தினர் துணை கொண்டு, அதிகாரத்தின் கொடுங்கரங்களையும் பயன்படுத்தி மோடியை முடக்க நினைத்தனர். அப்போது குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷாவை, போலி வழக்கில் கைது செய்தனர்.ஆனாலும், அறத்தின் பக்கம் இருந்ததால், துணிவுடன் போராடி, காங்கிரஸின் சதி வலைகளில் இருந்து மோடியும், அமித்ஷாவும் மீண்டு வந்துள்ளனர். அறத்தின் பக்கம் நின்றதால் தால் தான், குஜராத் முதல்வராக இருந்த மோடி இன்று நாட்டின் பிரதமராக இருக்கிறார்.

குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா, நாட்டின் உள்துறை அமைச்சராக இருக்கிறார். உண்மையின் பக்கம் இருப்பவர்களால்தான், இப்படி உறுதியுடன் போராட முடியும்.பிரதமர் மோடியின் 19 ஆண்டுகால இடைவிடாத போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது. பொது வாழ்வில் பெரும் துயரங்கள் சூளும் போது, அதனை எதிர்கொண்டு, வெற்றியாக மாற்ற வேண்டும் என்பதற்கு இருபெரும் தலைவர்களான மோடியும், அமித்ஷாவும் மிகச்சிறந்த உதாரணம். இருவரும் நெருப்பாற்றில் நீந்தி சாதித்த, இரு பெரும் ஆளுமைகளுக்கும் எனது நல்வாழ்த்துகள். இருவரும் இன்னும் பல சாதனைகளைப் படைப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்,எம்.எல்,ஏ, தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version