வாரணாசியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை, பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவ வசதி, கொதௌலியாவில் பல அடுக்கு வாகன நிறுத்தம், கங்கை ஆற்றில் படகு போக்குவரத்து, வாரணாசி – காசிபூர் நெடுஞ்சாலையில் 3 வழி பாலம் உட்பட பல பொது திட்டங்கள் மற்றும் பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த திட்டங்களின் மதிப்பு சுமார் ரூ.744 கோடி.
ரூ.839 கோடி மதிப்பிலான பல திட்டங்கள் மற்றும் பொதுப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பெட்ரோ கெமிக்கல் மற்றும் தொழில்நுட்ப மத்திய மையத்தின் (CIPET) திறன் மற்றும் தொழில்நுட்ப உதவி மையம், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 143 ஊரக திட்டங்கள், கர்க்கியான் பகுதியில் மாம்பழம் மற்றும் காய்கறிகளின் ஒருங்கிணைந்த பேக்கிங் இல்லம் ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கியுள்ளன.
இதற்காக நேற்று வாரணாசி விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடியை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மட்டும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதில் பெண்கள்அதிகாரிகள் இருவர் மோடிக்கு வணக்கம் தெரிவித்தனர். பிரதமரும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார். அப்போது, பிரதமரின் காலில் விழ ஒரு பெண் முயன்றுள்ளார். இதை பார்த்தது சுதாரித்து விலகிய பிரதமர் மோடி, அப்பெண்ணை நோக்கி குணிந்து பதில் மரியாதை செய்தார். பிரதமரின் செயலை கண்ட பாஜக மகளிரணியின் தேசிய தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற வானதி சீனிவாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், பிரதமரின் செயல் பெண்கள் மீதான அவரது உயர்ந்த மரியாதையை காட்டுவதாகவும் கூறியுள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















