வரும் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் வெகு விமரிசிசையாக கொண்டாடப்படும். தைப்பூசவிழாவையொட்டி தமிழகம் முழுவதிலிருந்தும் பழனிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். இந்த நிலையில் பழநி தைப்பூச விழாவிற்கு பாதயாத்திரையாக சென்ற, நெற்குப்பை நகரத்தார் எடுத்துவந்த 422 ஆண்டுகள் பழமையான தங்கவேல், தாமிரவேல் திருடப்பட்டதால் பக்த்ர்கள் வேதனை அடைந்துள்ளார்கள்.
வருடம்தோறும் சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு பகுதியைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார், நாட்டார்கள் உட்பட பல குழுவினர் தைப்பூசத்திற்கு காவடி எடுத்து பாதயாத்திரையாக பழநிக்கு செல்வர்கள் .காரைக்குடி கண்டனுாரில் இருந்து காவடியுடன் வைரவேல், மேலசிவபுரியில் இருந்து தாமிரவேல், குன்றக்குடி நகரத்தார் ரத்தினவேல், நெற்குப்பையில் இருந்து தங்கவேல், தாமிர வேலுடனும் செல்வர்.
நெற்குப்பை நகரத்தார் 1601ம் ஆண்டு முதல் 422 ஆண்டுகளாக காவடி எடுத்து பாதயாத்திரையாக வருகின்றனர். இவர்கள் நெற்குப்பையில் உள்ள பழநி கோயில் வீட்டிலிருந்து, பழமையான தலா 3.5 இன்ச் நீளமுள்ள தங்கவேல் மற்றும் தாமிரவேலை எடுத்துக் கொண்டு 95 காவடிகளுடன் பாதயாத்திரையாக கிளம்பினர்.
தெற்குகளம், பாண்டங்குடி, நத்தம் சமுத்திராபட்டி, கொசவபட்டி, திண்டுக்கல் வழியாக பழநியை அடைவர். ஜனவரி 13ல் நத்தம் சமுத்திராபட்டி வந்தடைந்தனர். அங்கு வழக்கம் போல் பழநியாண்டவர் முருகன் மண்டபத்தில் தங்கினர்.
ஜனவரி 14 அதிகாலையில் பாதயாத்திரை கிளம்புவதற்காக வேல் வைத்துள்ள கருவறைக்கு சென்று பார்த்தபோது 2 வேல்களையும் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.பயணத் திட்டத்தின் படி தைப்பூசத்திற்கு முதல் நாள் ஜனவரி 17ல் பழநி சென்று சேர வேண்டும். ஆனால் வேல் கிடைக்காததால் சமுத்திராபட்டியிலேயே தங்கினர்.
பின்னர் வேறு வழியின்றி புதிய வேல் தயாரித்து எடுத்து வந்தனர். அதன்பின் மீண்டும் நேற்று மாலை 3:00 மணிக்கு மேல் புதிய வேலை வைத்து பூஜை செய்து, பாதயாத்திரையை தொடங்கினர்.பழநியில் உள்ள நகரத்தார் மண்டபத்தில் குன்றக்குடி, கண்டனூர், மேலசிவபுரி காவடி குழுவினர்களுடன் சேர்ந்து அவரவர் கொண்டு வரும் வேல்களுடன் வழிபாடு நடத்துவர். பின் தைப்பூசம் முடிந்து 2 நாட்களுக்குப் பிறகு ஜன.20ல் இந்தக் குழுவினர் காவடி, வேல்களுடன் மலைக்கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்பர்