தேனி மாவட்டத்தை சார்ந்த தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் காவல்துறையுடன் இணைந்து மாரத்தான் போட்டி நடத்துவதாகக் கூறி, 30 லட்சம் ரூபாய் காலெக்சன் செய்து விட்டு ஒட்டிவிட்டார். இது முதல் முறை இல்லையாம்..இதனால் தேனி மாவட்ட அரசியலில் இந்த சம்பவம் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது!
தேனி தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளராக இருபப்வர் ஸ்டீபன். ‘ஃப்ரீக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார் இதன் மூலம் பணம் வசூலித்து விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் ‘தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டீபன்ஃ தனது ப்ரீக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ சார்பில், கடந்த வாரம் 04-2-2024 அன்று தேனியில் மாரத்தான் போட்டியை மாவட்டக் காவல்துறையுடன் இணைந்து நடத்துவதாக அறிவித்துள்ளார். மேலும் இப்போட்டிக்கு வசூல் வேட்டையும் நடத்தியுள்ளார், மாரத்தான் போட்டியில், நடைபெறுவதற்கு முன்னரே பல்வேறு குளறுபடிகள் எழுந்ததையடுத்து, போட்டியைப் பாதியிலேயே நிறுத்திவிட்டுத் தலைமறைவாகிவிட்டார்.
இந்த மாரத்தான் போட்டியானது ‘‘ஃப்ரீக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியும் தேனி மாவட்ட காவல்துறையும் இணைந்து 5 பிரிவுகளாக மாரத்தான் போட்டி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தலா 5,000 முதல் 25,000 ரூபாய் வரை பரிசுத்தொகை, சைக்கிள் வழங்கப்படும் என்றெல்லாம் விளம்பரம் செய்து, போட்டியில் பங்கேற்பதற்கான நுழைவுக் கட்டண மாக ரூ.300 வசூல் செய்திருந்தனர்.
இப்படி 4,000-க்கும் மேற்பட்டவர்களிடம் பணம் வசூலித்திருக்கிறார்கள். மேலும் நுழைவுக் கட்டணம் போக, பெரிய வணிக நிறுவனங்கள், முக்கியக் கட்சி நிர்வாகிகள், ஸ்போர்ட்ஸ் அகாடமி எனப் பல்வேறு வகைகளிலும் நன்கொடை என்ற பெயரில் வசூல் நடந்திருக்கிறது.
ஆனால், இந்த மாரத்தான் போட்டி சரியான திட்டமிடாததால், பல்வேறு குழப்பங்கள் நிகழ்துள்ளது. போட்டியின் போது மயங்கி விழுந்தவர்களுக்கு முதலுதவி வழங்கும் வசதிகூட ஏற்பாடு செய்யப்படவில்லை. ஒருகட்டத்தில், போட்டியாளர்கள் அனைவரும் ஸ்டீபனிடம் வாக்குவாதம் செய்யவே… அவரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் அங்கிருந்து மாயமாகி விட்டனர் .
இந்த நிலையில், மாரத்தான் போட்டி அமைப்பாளர்கள் 30 லட்ச ரூபாய் மோசடி செய்துவிட்டதாக வழக்கு பதிவு செய்திருக்கும் தேனி காவல்துறை, ‘தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டீபன் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடிவருகின்றனர். அனால் மொத்தம் 80 லட்ச ரூபாய் வரை மோசடி நடத்திருக்கும் என்று தெரிகிறது.
தற்போது போலீஸ் புகாரில், 30 லட்ச ரூபாய் மட்டுமே மோசடி நடந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். ஆனால், நுழைவுக் கட்டணம் போக, பெரிய வணிக நிறுவனங்கள், முக்கியக் கட்சி நிர்வாகிகள், ஸ்போர்ட்ஸ் அகாடமி எனப் பல்வேறு வகைகளிலும் நன்கொடை என்ற பெயரில் வசூல் நடந்திருக்கிறது. இதையெல்லாம் சேர்த்தால் மொத்தம் 80 லட்ச ரூபாய் வரை மோசடி நடத்திருக்கும் என்று தெரிகிறது. தன்மீது தவறு இல்லையெனும் பட்சத்தில் ஏன் ஸ்டீபன் தலைமறைவாக வேண்டும்?
மாரத்தான் போட்டியை நடத்துவதற்கான விதிகளைப் பின்பற்றாததோடு, சரிவர முன்னேற்பாடுகளையும் செய்யாதவருக்கு தேனி டி.எஸ்.பி பார்த்திபன் எந்த வகையில் அனுமதி வழங்கினார் என்றும் தெரியவில்லை. இந்தக் குளறுபடிகளுக்கு உடந்தையாக இருந்த காவல்துறையினர் மீது வழக்கு இல்லையா?’’ என்று கேள்வி எழுப்பினர்.மேலும் தி.மு.க இளைஞரணி மாநில துணை அமைப்பாளர் இன்பாரகு ‘ தமிழ்நாடு தடகளச் சங்கத்தின் இணைச் செயலாளராக இருப்பவர் இவரின் நண்பர் தான் தலைமறைவான திமுக நிர்வாகி ஸ்டீபன் .