திருக்கோவிலூர் ரோட்டரி சங்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் தனியார் மண்டபத்தில், ரோட்டரி கிளப் ஆப் திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி சார்பில் ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் வருகை நடைபெற்றது.S.S. வாசன் தலைமையுரை நிகழ்த்தினார். செயலாளர் M.செந்தில்குமார் இந்த ஆண்டில் செய்த 30 சேவைத்திட்டங்களை பட்டியலிட்டு உரை நிகழ்த்தினார். ரோட்டரி சமுதாய குழுமம் உறுப்பினர்கள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி R.C.C. சேர்மேன் வின்சென்ட் தலைமையில் நடைபெற்றது.


துணை ஆளுநர் S. அன்பழகன் ஆளுநர் அறிமுகம் செய்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆளுநர் ராகவன் கலந்து கொண்டார்.இந்த நிகழ்வில் மாவட்ட துணை ஆளுநர் அன்பழகன். இந்த நிகழ்வில் வித்யா மந்திரி CBSE பள்ளி குழும தலைவர் பாரஸ்மல் ஜெயின் அவரது கண்களை புதுச்சேரி அரவிந்தர் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டதை தொடர்ந்து அவரை கௌரவிக்கும் விதமாக, ரோட்டரி சங்கம் சார்பில் வித்யா மந்திரி பள்ளியின் தாளாளர் சுனில் குமாரிடம் நினைவுக் கேடயம் வழங்கப்பட்டது.

அதேபோல் நெற்குணம் கிராமத்தை சேர்ந்த கணவரை இழந்த இளம் பெண் அபி என்பவரது 3 குழந்தைகளுக்கும் தலா ₹.5,000 ரூபாய் வங்கி வைப்பு நிதி வைக்கப்பட்ட அதற்கான புத்தகத்தினை வழங்கினர்.மேலும் வீரட்டகரம் பகுதியை சேர்ந்த விதவைப் பெண்ணுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் ரோட்டரி சங்க உறுப்பினர் சேகர் நான்கு இரும்பு கட்டில்களை திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் சௌந்தர், முத்துக்குமாரசாமி, காமராஜ் ,சேகர் ,மருத்துவர் கலையரசி,ராஜேஷ், மகாவீர் ஜெயின், சதீஷ்குமார், ஜீவ சீனிவாசன், நடராஜன், சாந்தி பால், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியின் இறுதியில் ரோட்டரி சங்கத்தின் பொருளாளர் கோத்தம்சந்த் நன்றி உரையாற்றினார்.

Exit mobile version