திரிபுராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ., அமோக வெற்றி பெற்றது.
அகர்தலா மாநகராட்சி மற்றும் 13 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகிறது. 51 வார்டுகளை கொண்ட அகர்தலா மாநகராட்சியில் அனைத்து இடங்களையும் பா.ஜ., கைப்பற்றியது.
அதேபோல், கோவாய் மாநகராட்சி, குமர்ஹட் மாநகராட்சி, சப்ரூம் நகர் பஞ்சாயத்து, அமர்பூர் நகர் பஞ்சாயத்து ஆகியவற்றையும் பா.ஜ., கைப்பற்றியது. தர்மபுர், அம்பச மாநகராட்சிகள், பனிசகர், ஜிரனியா, சோனாபுரா நகர் பஞ்சாயத்து ஆகியவற்றிலும் பா.ஜ., முன்னிலை பெற்றது.மாநிலத்தில் மொத்தம் 334 வார்டுகள் உள்ளன. அதில்,112 இடங்களில் பா.ஜ., வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றனர். எஞ்சிய 222 இடங்களுக்கு தேர்தல் நடந்தது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















