கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் மையப்பகுதியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவரின் விட்டின் அருகே திருசெந்தூர் முருகன்கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில தனிநபர் இல்ல திருமண நிகழ்ச்சியை நடத்த முயற்சிகள் எடுக்க பட்டதாகவும் அதற்க்கு இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் துணை நின்றதாகவும் தகவல்கள் கசிந்தன, பின்னர் இந்து இயக்கதினர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவர் நாகராஜன் அவர்களின் முயற்சியால் தடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவர் நாகராஜன் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எழுதியுள்ள மனுவில் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலராகவும் முப்பந்தல் கோயில் செயல் அலுவலராகவும் மற்றும் நாகர்கோயில் பகுதிக்கு உட்பட்ட இந்து அறநிலையத்துறை சொத்து பராமரிப்பு அதிகாரி சுமார் எட்டு மாதங்களுக்கு முன்பு நாகர்கோயில் மையப்பகுதியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவரின் விட்டின் அருகே திருசெந்தூர் முருகன்கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் உள்ள மரங்களை பசுமை திர்ப்பாய அனுமதி இன்றி மாற்றியுள்ளர்.
வெட்டப்பட்ட மரங்கள் நின்ற அடையாளம் தெரியாமல் இருக்க கடந்த ஒரு வாரமாக அந்த இடத்தை வாகனங்கள் கொண்டு சமப்படுத்தியுள்ளார். மேலும் அந்த இடத்தில் தனிநபரின் இல்ல திருமண விழாவிற்கு கொடுக்க இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் முயற்சித்துள்ளார். அதில் உள்ள மரங்களை வெட்டி அப்புற படுத்தியதால் அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.மேலும் அந்த இடத்தில உள்ள கிணறையும் தற்போது காணவில்லை.
எனவே மேற்படி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார். நாகர்கோயிலை சார்ந்த நாஞ்சில் ராஜா மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவர் நாகராஜன் அவர்களின் முயற்சியால் மேற்படி இடம் தற்போது முள்வேலி போடப்பட்டு பாதுகாக்கபட்டுள்ளது.
கட்டுரை:எழுத்தாளர் சுந்தர்.