“12 மொழிகளில் தயாராகிறது திருக்குறள்” வெளியிடுகிறார் பிரதமர் மோடி..

தமிழுக்கும் தமிழரை பண்புக்கும் பிரதமர் மோடி எப்போதும் மரியாதை செலுத்தி வருகிறார். இந்தியா மட்டுமல்லவெளிநாடுகளுக்கு சென்றாலும் அணுகும் தமிழின் பெருமையை கூறுகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடி வெளியிடும் வகையில், 12 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்து அச்சிட்டு வருவதாக, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்நிறுவனத்தின் இயக்குனர் சந்திரசேகரன் கூறியதாவது: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், சங்க இலக்கியங்களை இந்திய மொழிகளிலும் அயலக மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளது.அதிலும் திருக்குறள், தொல்காப்பியத்தை, அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து, அனைவருக்கும் தமிழ் மொழியின் தொன்மை மற்றும் தமிழரின் பண்பாட்டை அறிவிப்பதில், ஆர்வம் காட்டி வருகிறது.

ஏற்கனவே, திருக்குறள் மொழிபெயர்ப்பை படித்து, பிரதமர் வியந்து பாராட்டி உள்ளார். அவர் பேசும் பல மேடைகளில், திருக்குறளை மேற்கோள் காட்டியும் வருகிறார்.சமீபத்தில், சென்ன வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும், திருக்குறளின் ஹிந்தி மற்றும் குஜராத்தி மொழிபெயர்ப்புகள் வழங்கப்பட்டன. அவரும் சில திருக்குறள்களை படித்து, அதன் கருத்துக்களை வியந்து பாராட்டியுள்ளார்.

அந்த வகையில், ஹிந்தி, சமஸ்கிருதம், மராத்தி, ஒடியா, நேபாளி, உருது, வாக்ரி – போளி, படகா, மலையாளம் ஆகிய உள்நாட்டு மொழிகள் மற்றும் அரபி, பாரசீகம், ஆங்கிலம் ஆகிய அயலக மொழிகளில் தயாராகும் நுால்களை, பிரதமர் வெளியிடும் வகையில் ஏற்பாடு செய்து வருகிறோம்.

அவர் வெளியிட்டால், உலக அறிஞர்களின் பார்வையில் பட்டு, பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என நம்புகிறோம். இதற்கான ஏற்பாடுகளை, மத்திய கல்வி அமைச்சகம் செய்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய ஒருமைப்பாடு என்றால் என்ன என்பதை மோடி அரசு தெளிவாக செய்கின்றதுமுன்பெல்லாம் திமுக தரப்பு திருகுறள் தமிழர் தமிழ் என தூக்கிபிடித்து ஒருவகை பிரிவினைவாதம் பேசிற்று. இதனை காங்கிரசும் சரியான முறையில் அணுகாமல் இருக்க ஒரு குழப்பமான தமிழர் வெறுப்பு சித்தாந்தம் பல இடங்களில் பரவ ஆரம்பித்தது

அதன் தொடர்ச்சித்தான் முன்பு நாடெங்கும் திமுக திறக்க விரும்பி சர்ச்சையான திருவள்ளுவன் சிலை
நிச்சயம் காங்கிரஸ் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால், குறளை ஒரு தேசிய நூலாக அங்கீகரித்து எல்லா மொழியிலும் அரசே அதனை கொண்டுவந்திருந்தால் சிக்கல் வந்திருக்காது

இப்பொழுது மோடி அரசுதான் அதனை செய்கின்றது.முன்பு திமுக 15 வருடம் மத்திய அரசில் இருந்தும் செய்யாத இந்த விஷயத்தை, திருகுறளை எல்லா மொழியிலும் கொடுத்து அதை தேசிய நூலாக அங்கீகரிக்க வழி செய்ய தவறியதை பாஜக அரசுதான் சரி செய்திருக்கின்றது

ஆக தமிழும் திருவள்ளுவரும் மோடி அரசால்தான் காக்கபடுகின்றார்கள், நாடெல்லாம் கொண்டு சேர்க்கபடுகின்றார்கள் திமுகவினர் செய்யாததையெல்லாம் மோடி அரசுதான் செய்கின்றது“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட நாடு” எனும் மகாகவியின் வாக்கு மோடியாலேதான் நிறைவேறுகின்றது

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version