கூசாமல் பொய் சொல்வார் திருமாவளவன் முரசொலி பஞ்சமி நிலத்தை மீட்க போராடுவாரா? – தடா பெரியசாமி!

பஞ்சமி நிலம் மூலபத்திரம் என்றால் தி.மு.கவிற்கு சற்றுபயம் வந்துவிடும் என்பதே உண்மை. முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தை அபகரித்து கட்டப்பட்டது என முதலில் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆரம்பிக்க அதை தொடர்ந்து பா.ஜ.க வின் தடா பெரியசாமி, டாக்டர் ஸ்ரீநிவாசன் ஆகியோரின் புகாரை எஸ்.சி. எஸ்.டி ஆணையத்திடம் புகார் அளிக்க அந்த புகாரை ஏற்றுக்கொண்டு விசாரணையில் இறங்கியது எஸ்.சி. எஸ்.டி ஆணையம்.

இதனை தொடர்ந்து திமுக-தலைவர் ஸ்டாலினுக்கு முரசொலி பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு அழைப்பு வந்தது.பின்பு மாற்று பிரமுகராக ஆர்.எஸ்.பாரதியை அனுப்பியது மேலும் முரசொலி அலுவலகம் வாடகைக்கு தான் இருக்கிறோம் என பல்டி அடித்தார் தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் ஆனால் இன்னும் முரசொலி மூல பத்திர விஷயம் கிடப்பில் தான் இருக்கிறதே தவிர மூடவில்லை. எப்போது வேண்டுமானாலும் மீண்டும் மூல பத்திர விவகாரம் சூடு பிடிக்கும்.

இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன், தனது கட்சி நிர்வாகிகளுடன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அப்போது, ‘தமிழகத்தில் பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும்’ என்று, கோரிக்கை விடுத்தார். என கூறப்படுகிறது. இதற்கு தலித் தலைவர்கள், திருமாவளவனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இது குறித்து தினமலர் நாளிதழுக்கு பாரதிய ஜனதா கட்சியின் , தேசிய செயற்குழு உறுப்பினரும், கள்ளக்குறிச்சி மாவட்ட பார்வையாளருமான தடா பெரியசாமியின் பேட்டியில்..

தமிழகம் முழுவதும் , பட்டியலின மக்களுக்கு உள்ள பிரச்னைகள் குறித்து, தொடர்ந்து தகவல் சேகரித்து வருகிறோம். இதற்காக, தலித் இயக்க தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம். இதில், விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தை சேர்க்கவில்லை. காரணம், அவர்களுக்கு, தலித் பிரச்னைகளை தீர்ப்பதிலும், தலித் முன்னேற்றத்திலும் துளியும் ஆர்வமில்லை. தென் மாவட்டங்களில், குறும்பர், பன்னாடி, பள்ளர் உள்ளிட்ட, ஏழு ஜாதிகளை உள்ளடக்கி, தேவேந்திர குல வேளாளர் என, பொதுப் பெயரிட்டு அழைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு, அது, கிட்டத்தட்ட நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

அதேபோல, பறையரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில், பறையர், சாம்பவர், ஆதிதிராவிடர் என, தனித்தனியாக பெயரிட்டு அழைக்கும் வழக்கம் உள்ளது.ஆகவே, பறையர் இனத்தைச் சேர்ந்த இந்த மூவரையும், ஆதி திராவிடர் என, ஒரே பெயரிட்டு அழைக்க வேண்டும் என்பது முதல் கோரிக்கை.தமிழகம் முழுதும், 1.5 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் உள்ளன. நாலு வகைகளில், பஞ்சமி நிலம் பிரிக்கப்பட்டு இருந்தாலும், ஒரே சட்டத்தின் கீழ் தான் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அந்த நிலம், தலித்களுக்கு உரியவை.ஆனால், எல்லாமே தலித் அல்லாதோரிடம் இருக்கிறது. அதை மீட்க வேண்டும் என்பது, இரண்டாவது கோரிக்கை.

பல கிராமங்களிலும், தலித் மக்கள் தனி இடங்களில் வசிக்கின்றனர். அவர்கள் வசிக்கும் இடங்கள், சேரி, காலனி, அரிஜன காலனி, பறத் தெரு, பள்ளத்தெரு என, அழைக்கப்படுகிறது. அலுவலக பதிவுகளிலும் அப்படியே உள்ளது. இதுவும் ஒரு தீண்டாமை தான்; அதை ஒழிக்க வேண்டும்.அதற்காக, இந்தப் பகுதிகளை பொதுப் பெயரிட்டு அழைக்க அரசு உத்தரவிட வேண்டும் என்பது, மூன்றாவது கோரிக்கை.இந்த மூன்று கோரிக்கைகளுக்காக, தலித் இயக்கங்கள் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. நாங்கள், இந்த போராட்டங்களை கையில் எடுத்தால், தலித் மக்களிடமிருந்து தான் தனிமைப் படுத்தப்படுவோம் என, அஞ்சத் துவங்கினார் திருமாவளவன்.

இதையடுத்தே, முதல்வர் ஸ்டாலினை கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்து, பஞ்சமி நில மீட்பு தொடர்பாக, மனு அளித்திருக்கிறார். அதில், பஞ்சமி நிலம் மீட்பு தொடர்பாக, கமிஷன் அமைக்கவும் கோரியிருக்கிறார்.இது தொடர்பாக, ஏற்கனவே மூன்று கமிஷன் அமைக்கப்பட்டு, அவற்றின் முடிவுகள் அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், தலித் மக்களை ஏமாற்ற திருமாவளவன் நாடகம் போடுகிறார். எனினும், தலித் மக்களின் நலனுக்கான கோரிக்கை விடுத்திருப்பதை வரவேற்கிறோம். தி.மு.க வின், ‘முரசொலி’ அறக்கட்டளைக்காக வாங்கப்பட்டுள்ள நாளிதழ் அலுவலகம் இருக்கும், சென்னை, கோடம்பாக்கம் நிலமும், பஞ்சமி நிலம் தான். அந்த நிலத்தை, தலித் மக்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலினிடம் திருமாவளவன் வலியுறுத்துவாரா?

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அவரின் சிறுதாவூர் பங்களா உள்ள நிலமும், பஞ்சமி நிலம் என்ற, குற்றச்சாட்டு எழுந்தது. விசாரிக்க கமிஷன் அமைக்கப்பட்டு, பஞ்சமி நிலம் என கண்டறியப்பட்டது.அப்போது, அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த திருமாவளவன், சிறுதாவூர் நிலம், பஞ்சமி நில வகையைச் சேர்ந்தது அல்ல’ என, கூறினார். தன் அரசியல் நிலைப்பாட்டுக்காக திருமாவளவன், கூசாமல் பொய் சொல்வார். அதனால், திருமாவளவன் முன்னர் போல் இல்லாமல், சிறுதாவூர் பங்களா மற்றும் முரசொலி அலுவலக இடத்தை மீட்டு, மீண்டும் தலித்களுக்கே திருப்பி அளிக்கச் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி தினமலர்

Exit mobile version