பிஜேபியின் கூட்டணி கட்சியான அப்னா தளம் கட்சியின் தலைவி அனுப்பிரியா படேல் மத்திய அமைச்சராக இருக்கிறார். ஏற்கனவே 2016-19 வரை மோடி அரசில் அமைச்சராக இருந்தவர் தான்.மோடியின் இரண்டாவது ஆட்சியில் இப்பொழு து உத்தர பிரதேச தேர்தலை முன் வை த்து அமைச்சராக்கி இருக்கிறார்கள்.அனுப்பிரியா படேல் மிர்சாபூர் தொகுதியில் இரண்டு முறை தொடர்ந்து பிஜேபி கூட்டணி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார்.அப்பா விட்டுப் போன சொத்தான அப்னா தளத்தை சிதறாமல் காப்பாற்றி வருகிறார்.இவருடைய அப்பா சொனேலால் படேல் தான் பகுஜன் சமாஜ் கட்சியை கன்ஷிரா முடன் சேர்ந்து உருவாக்கினார்.கன்ஷிராம் மாயாவதி கைகளில் சிக்கியபிறகு பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விரட்டப்பட்ட சொனேலால் படேல் அப்னாதளம் என்கிற கட்சியை உருவாக்கினார்.
உத்தரபிரதேத்தில் உள்ள சுமார் 4- 5% குர்மிக்களுக்காக இந்த கட்சி உருவானது சொனேலால் படேல் இறந்தவுடன் அவருடைய மனைவி கிருஷ்ணா படேல் கட்சியை கைப்பற்றி தலைவரானார் மகள் அனுப்பிரியா படேலும் அவருடைய கணவர்ஆஷிஷ் சிங் இன்னொரு மகள் என்று குடும்பத்தை வைத்தே கட்சியை நடத்தி வந்தார் இடையில் குடும்பத்தில் நடைபெற்ற அடிதடிகளால் அம்மாவும் மகளும் அப்னா தளத்தை இரண்டாக பிரித்து ஆளுக்கு ஒரு பிரிவை நடத்தி வருகிறார்கள். அம்மா கிருஷ்ணா படேல் நடத்தும் அப்னாதளம் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது மகள் அனுப்பிரியா படேல் நடத்தும் அ ப்னா தளம் (சோனேலால் )பிரிவு பிஜேபி கூட்டணியில் இருக்கிறது. அனுப்பிரியாபடேல் ஒரு வெற்றிகரமான அரசியல் வாதியாக இருக்கிறார் 2012 ல் நடைபெற்ற உத்தரபிரதேச பொது தேர்தலில் ரோஹனியா தொகுதியில் போட்டியிட்டு போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றவர் என்கிற பெருமையை வைத்து இருக்கிறார்.அடுத்து2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல் களில் மிர்சாபூர் தொகுதியில் வெற்றி பெற்று தன்னுடைய அரசியல் செலவாக்கை தக்க வைத்துக்கொண்டார்.
ஆனால் இவருடைய அம்மா கிருஷ்ணா படேலோ போட்டியிட்ட முதல் தேர்தலில் தோல்வி அடைந்து விட்டார்.பெற்ற அம்மா வைதோற்கடித்தது அனுபிரியா படேலும் அவருடைய கணவரும் தான்.இதனால் தான் கட்சி இரண்டாக உடைந்து விட்டது அனுப்பிரியா படேல் கேடி லேடி.இவருடை ய அப்பா சொனேலால் படேல் கார் விப த்தில் இறந்த 20 நாளில் டீச்சராக இருந்த பொழுது காதலித்து வந்தவரை திருமண ம்செய்து கொண்டு அரசியலுக்கு வந்த வர்.இவருடைய அப்பாவின் மரணம் இன்று வரை மர்மம் தான்.
மிர்சாபூர் வாரணாசி பகுதிகளில் உள்ள குர்மி இனமக்களிடம் செல்வாக்கு வைத்து இருக்கிறார்.இதனால் தான் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் குர்மி இன ஓட்டுக்களை கணக்கு போட்டு அமைச்சராக கொண்டு வருகிறார்கள்.மற்றபடி அனுப்பிரியா படேல் நல்ல படித்த அறிவாளி தான் இளம் வயது சாதிப்பாரா? என்று பார்ப்போம்..