இதுதான் இந்தியா… உக்ரைனுக்கு வாரி வழங்கிய இந்தியா… உலகை உற்றுப் பார்க்க வைத்த மோடி-ஜெலென்ஸ்கி

Narendra Modi Ukraine visit

Narendra Modi Ukraine visit

2022ம் ஆண்டு பிப்ரவரி 24ல் தொடங்கிய உக்ரைன், ரஷ்யா யுத்தம் இன்னமும் ஓயவில்லை. உக்ரைனின் 25 சதவீதம் பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்துள்ள நிலையில், போரை நிறுத்த பல நாடுகள் முயற்சித்தும் பலனிக்கவில்லை.

இந்த நிலையில் போலாந்தில் இருந்து ரயில் மூலம் உக்ரைனுக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்துள்ளனர். இதன் மூலம் 45 ஆண்டுகளுக்குப் பிறகு, உக்ரைன் சென்றுள்ள இந்திய பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் மோடி. சுதந்திரம் அடைந்த உக்ரைனுக்கு முதல் பயணம் என்ற பெருமையும் பெற்றுள்ளார் பிரதமர் மோடி.

அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்றுள்ள நிலையில், கீவ் நகரம் மீது ரஷ்யா இதுவரை எந்த தாக்குதலும் நடத்தவில்லை. கடந்த 24 மணி நேரமாக மோடியின் வருகையை ஒட்டி தனது தாக்குதலையே நிறுத்தி வைத்துள்ளது ரஷ்யா. கீவ் நகரத்தில் இதுவரை எங்கும் Siren ஒலிக்கவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது, உக்ரைனின் கீவ் நகரம் சென்றடைந்த பிரதமர் மோடி, மகாத்மா காந்தியின் அமைதி மற்றும் அகிம்சை செய்தியை வலியுறுத்தி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து, ரஷ்ய ஆக்கிரமிப்பால் உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக இன்று கீவ் நகரில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

குறிப்பாக இந்த பயணத்தின் போது, ​​மருத்துவ உதவிக்கான பீஷ்ம் கனசதுரத்தை இந்தியா உக்ரைனிடம் ஒப்படைத்துள்ளது. ஆம், ரஷ்யா உடனான போரில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு, ‘Project BHISHM’ திட்டத்தின்கீழ் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், கூடாரங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த உதவியை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் கிய்வில் வழங்கினார்.

போர்க்கள பூமியில், உலக நாடுகளால் உற்றுபார்க்கப்பட்ட இந்த சந்திப்பு சர்வதேச அரசியல் களத்தில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. பிரதமர் மோடியுடனான சந்திப்பு அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கிக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இப்படிப்பட்ட சூழலில் பிரதமர் மோடியை சந்தித்த போது ஜெலென்ஸ்கி அவருடன் புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டார். அதில் பரஸ்பரம் இருவரும் கட்டியணைத்துக் கொண்டு இருக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இந்த புகைப்படத்தை ஜெலென்ஸ்கி தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, வைரலாகி உள்ளது.

பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே 20 லட்சம் லைக்குகளை கடந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. உக்ரைன், ரஷ்யா போரினை நிறுத்தும் வல்லமை கொண்டவர் பிரதமர் மோடி என்று பல்வேறு நாடுகளும் நம்பிக்கை வெளியிட்டுள்ளன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், இந்த ஒற்றை போட்டோ, இணைய உலகில் பெரும் தாக்கத்தையும், நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version