மோடி சர்க்கார் 2.0 வில் ஓராண்டில் சாதித்தது என்ன? ராமர் கோவில் முதல் முத்தலாக் வரை சொன்னதை செய்தது !

1. இஸ்லாமிய பெண்களின் கவுரவம் மற்றும் பாலின சமத்துவத்தை நிலைநிறுத்தும் முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது!

2. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35A ரத்து!

3. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான 12 வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்ததை தொடர்ந்து, மேலும் 15 மூத்த சுங்க அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது!

4. மக்களவையில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 128% உற்பத்தி!

5. இந்திய இராணுவத்தில் சேரத் தயார்படுத்தும் முக்கிய நோக்கமாக கொண்ட சைனிக் பள்ளியில் பெண் குழந்தைகளை சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

6. பிரதமர் மோடி அரசின் துரித பாதுகாப்பு நடவடிக்கையின் எதிரொலியாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் 86 சதவீதம் சரிவை கண்டன.

7. ரயில்வே துறையில் காலியாக இருந்த சுமார் 9000 பணியிடங்களில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன.

8. நாடு முழுவதும் ஒற்றை ரேஷன் கார்டிற்கான, ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை’ திட்டம் ஜூன் 1, 2020 முதல் நடைமுறைப் படுத்தப்பட உள்ளன.

9. ராமேஸ்வரம் அருகே பாம்பனில் ருபாய் 250 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில்வே பாலம் கட்டும் பணிகள் தொடங்கின.

10. பொருளாதார முடக்கத்தால் தவித்து வந்த ஐக்கிய நாடுகள் சபைக்கு செலுத்தவேண்டிய 2020ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகையை திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவே இந்தியா செலுத்தியது.

11. ஜனவரி 10 2020 முதல் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தன!

12. 2009 முதல் 2014 வரைக்கான இரயில்வே பட்ஜெட்டில், தமிழகத்திற்கான சராசரி ஒதுக்கீடு ரூபாய் 879 கோடி மட்டுமே. 2020-21க்கான பட்ஜெட்டில், தமிழகத்திற்கு ரூபாய் 2812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2009 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சியின் சராசரி ஒதுக்கீட்டை விட 220% அதிகம்.

13. மேக் இன் இந்தியா திட்டத்தில் புதிய மைல் கல்: இந்திய விமானப்படை மற்றும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் இடையே ருபாய் 39,000 கோடி மதிப்பிலான 83 தேஜாஸ் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகின.

14. 4.6 லட்சம் குடியிருப்புகள் கொண்ட 1,600 கட்டுமான திட்டங்களை புதுப்பிக்க ரூபாய் 25,000 கோடி மத்திய அரசு நிதி.

15. இந்தியா – அமெரிக்க உறவை மேலும் பலப்படுத்தும் விதமாக, 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

16. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதையொட்டி, நிலையான நிலத்தடி நீர்வள மேலாண்மை மற்றும் சமூகத்தில் மாற்றங்களை கொண்டுவரவும், ‘அடல் புஜல்’ திட்டத்தை பிரதமர் மோடி அவர்கள் துவக்கி வைத்தார். இத்திட்டத்தால் இந்தியாவில் உள்ள சுமார் 8,350 கிராம பஞ்சாயத்துகள் பயனடைய உள்ளது.

17. 10,000 பேருக்கு நேரடி மற்றும் 50,000 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கும்விதத்தில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா ஆலை மீண்டும் திறக்கப்பட்டன.

18. தமிழகத்தின் கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் மற்றும் திருவள்ளூரில் ரூபாய் 325 கோடி செலவில் புதிதாக மூன்று மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

19. தனிநபர் வருமானவரி குறைப்பு!
ரூ.5 முதல் 7.5 லட்சம் வரை – 20% இருந்து 10% ஆக குறைப்பு
ரூ.7.5 முதல் 10 லட்சம் வரை – 20% இருந்து 15% ஆக குறைப்பு
ரூ.10 முதல் 12.5 லட்சம் வரை – 30% இருந்து 20% ஆக குறைப்பு
ரூ.12.5 முதல் 15 லட்சம் வரை – 30% இருந்து 25% ஆக குறைப்பு

20. விவசாயிகள் வங்கி கணக்குகளில் ஆண்டுதோறும் ரூபாய் 6000 வழங்கும் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தின் கீழ் 9.67 கோடி விவசாய குடும்பங்கள் பயனடைந்துள்ளன.

Exit mobile version