கடந்த மாதம் கோவையில் நடைபெறும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகளுக்காக கோவை முத்தண்ணன் குளக்கரையில் இருந்த 9 கோயில்கள், மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் இடிக்கப்பட்டன. இதறகு பல எதிர்ப்புகள் குவிந்த நிலையிலும் கோவில்கள் இடிக்கப்ட்டது. இதனை எதிர்த்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
இதே பில் தற்போது தூத்துக்குடியில் ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது தூத்துக்குடி மாவட்டம் ஜெயராஜ் ரோட்டில் உள்ளது முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் இதை அப்பகுதி மக்கள் பராமரித்து பல ஆண்டுகளாக வழிபாட்டு வந்தார்கள். இந்த நிலையில் துாத்துக்குடி மாநகராட்சியில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக கூறி மாநகராட்சியினர் இடித்தனர்.
உள்ளூர் திட்ட குழுமம் பொறியாளர் ரெங்கநாதன், மாநகராட்சி உதவி ஆணையர் ராமச்சந்திரன் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் போலீசார் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
ஏற்கனவே இக்கோயில்களை இடிக்கக்கூடாது என பா.ஜ.க மற்றும் ஹிந்துமுன்னணியினர் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.துாத்துக்குடியில் ஆக்கிரமிப்பில் இருப்பதாக மாநகராட்சியினர் அளவீடுகள் செய்த பல இடங்களில் ஆக்கிரமிப்புகளை விட்டுவிட்டு ஸ்மார்ட் சிட்டி கட்டுமான பணிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் ஹிந்து வழிபாட்டுத்தலங்களை இடிப்பதில் மும்முரம் காட்டுகின்றனர் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.