கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள, சடைகட்டி சாய்பாபா கோவில் பகுதியில் சித்தூர் – கடலூர் நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவில் வேலூரில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்ற தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான சொகுசு பேருந்து ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
https://www.facebook.com/share/r/19Wwp1LXqA/
இந்த விபத்தில் வேலூர் பகுதியை சேர்ந்த இளங்கோ(52), முகமது ரபீக்(51), சுகந்தி(52) ஆகிய மூவருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து,சக வாகன ஓட்டிகள் மற்றும் போலீசார் உதவியோடு அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவரகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த மணலூர்ப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்தில் 42 பேர் பயணம் செய்த நிலையில் மூன்று பேருக்கு மட்டும் காயம் ஏற்ப்பட்டு உள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
