திரௌபதி ஐவருக்கு மனைவி என எள்ளி நகையாடும் பல விமர்சன பகிர்வுகளை பார்த்திருக்கிறேன் …

பகிர்ந்தவர்களெல்லாம் முற்போக்குகள் … அறிவுஜீவிகள் … எழுத்தாளர்கள் … இல்லை, அப்படி சுய தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள் …

அட. முட்டாள்களே … குறைந்தபட்சம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒருபெண் ஐவருக்கு மனைவியாக இருந்திருக்கிறாள் என்று சொன்னால் அதுவல்லவோ முற்போக்கு ..‌.

ஹிந்து தர்மம் என்பது பெருங்கடல் … குட்டை போன்ற சிறு வட்ட மதங்கள் போதனைகளை நம்புகிறவர்களுக்கு அது புரியாது … ஹிந்து தர்மத்தை புரிந்துகொள்ள குறைந்தபட்சம் இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும் … அது ஒரு மத நூலிலோ ஒரு மதச் சடங்கிலோ நிகழ்ந்து விடாது .. சைவ வைணவ கடவுளர்கள் நடமாடிய இந்த மண்ணில் அது மரபணுவாக உயிரில் ஊறி இருக்க வேண்டும் …

ஒரு பெண் ஐவருக்கு மனைவியாக இருந்தால் கூட … அவளை இன்னொரு ஆண் இழிவு செய்தால் அவன் குலமே சர்வ நாசம் ஆகும் என்பதன் இதிகாச சாட்சிதான் திரௌபதி … ஒரு பெண்ணின் கற்பின் வெப்பம் சூரியனையே சுடும் என்பதற்கு உதாரணம் தான் திரௌபதி …

வெளிநாட்டு மேதைகளை அறிவாளிகள் என நம்பும் … மிஷினரிகளின் குரலாகப் பேசும் இவர்கள் போன்றோரை … உண்மையில் குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் பிற்போக்காளர்களாகத்தான் இருக்கிறார்கள்.

அவர்கள் பட்டியலின மக்கள் … ஜாதி ஹிந்துக்கள் .. முஸ்லிம்கள் என … மூன்று பிரிவாக பிரித்து வைத்து இந்தியாவை சிதைத்து மிஷனரிகளின் மதம் பரப்புதலுக்கும் … சீனாவின் இந்திய சித்தாந்த படையெடுப்பிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் துணைபோகும் சுயநலம் நிறைந்த, அன்னிய ஒட்டுண்ணிகளாகவே வாழ்ந்து விருதுகளையும் மேடைகளையும் ஊடகங்களையும் நக்கி பிழைப்பதை கவனித்து பார்க்க வேண்டும் …

இன்றைக்கு திரவுபதி படத்தை பிற்போக்கான சினிமா என முதலைக் கண்ணீர் வடிக்கும் அதிமேதாவி அறிவுஜீவிகள் அனைவருமே .. ஏன் நீங்கள் பட்டியலின பெண்கள் பிற சாதி ஆண்களை திருமணம் செய்ய வேண்டுமென்று பேசுவதில்லை?

திராவிட இடதுசாரி சமூக போராளிகள் எத்தனை பேர் .. தங்கள் குடும்பத்தில் பட்டியலின பெண்களை திருமணம் செய்து அழைத்து வந்துள்ளீர்கள்? பிராமணனை பார்ப்பான் நாய் என திட்டிக்கொண்டு பிராமண வீட்டு பெண்களை திருமணம் செய்வதை பெருமையாக கருதும் மனநோய்க்கு என்ன பெயர்?

பட்டியலின பெண்கள் குறித்து யோசனையே வராத உங்களுடைய முற்போக்கு பரப்புரைகள் எல்லாம் ஆணாதிக்கத்தின் அடுத்தகட்ட தொடை தட்டி மீசை முறுக்குதல் தானே? திரவுபதியை துகில் உரிந்த துச்சாதனனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? அவன் பகடையை வைத்து விளையாடினான்..

நீங்கள் ஜாதியை வைத்து விளையாடுகிறீர்கள் அவ்வளவுதான் வித்தியாசம் …

கட்டுரை: பாரதிய ஜனதா கட்சி பாலாஜி நிர்வாகி.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version