மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசனுக்கு எதிராக டுவிட்டரில் கருத்து வெளியிட்டதாக, கைது செய்யப்பட்ட, தமிழக பா.ஜ., மாநில செயலர் சூர்யாவுக்கு, மதுரை மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
சமீபத்தில் பா.ஜ., செயலாளர், சூர்யா, (40) மதுரையில், பெண்ணாடம் பேரூராட்சி, 12வது வார்டு கம்யூ., கவுன்சிலர் விஸவ்நாதன், மலம் கலந்த நீரில் கட்டாயப்படுத்தி வேலை செய்ய சொன்னதன் காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டு, துாய்மை பணியாளர் ஒருவர் இறந்தார்.
எங்கே உங்கள் போராட்ட குணம், உணர்ச்சி மிகுந்த வார்த்தைகள் என, எம்.பி., வெங்கடேசனிடம் கேள்வி எழுப்பி டுவிட்டரில் கருத்துகளை பதிவிட்டிருந்தார்.இது, சர்ச்சையான நிலையில், மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, சூர்யாவை கடந்த, 18ம் தேதி கைது செய்தனர்.
இவ்வழக்கில், சூர்யா ஜாமின் கோரி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், சூர்யாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.