தமிழகத்தில் முதல் முறையாக உளவு மற்றும் காவல்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட அஜித் தோவலுக்கு அடுத்த இடத்தில் உள்ள ஆர்.என்.ரவி அவர்கள் நியமிக்கபட்டிருப்பது இதுதான் முதல்முறை
இந்த நிலையில் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு ஆர்.என்.ரவி அவர்கள் முதல் சந்திப்பு டி.ஜி.பி., சைலேந்திரபாபு உடன்தான் இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுவும் திமுகவிற்கு மிக பெரிய ஷாக்.
கடந்த மாதம் தமிழகத்தினை பொறுத்தவரையில் பலர் நடு வீதியில் வெட்டி கொலை செய்யப்பட்டார்கள் குறிப்பாக தென் மாவட்டங்களில் ஜாதி ரீதியாகவும், முன் பகையின் காரணமாகவும் கொலைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்துவந்தத்து.
தமிழகத்தில் 6 இடங்களில் கொலை செய்யப்பட்டவர்களின் தலை துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் திண்டுக்கல் அருகே தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப் பின் தலைவர் பசுபதி பாண்டியன் கொலைக்கு பழிக்குப்பழியாக இருநாள்களுக்கு முன்பு நிர்மலா என்ற பெண் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
சென்னையிலும் கொலைச் சம்பவங்கள் அதிகம் நடைபெற்றன. இந்த நிலையில் தான் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்களின் சந்திப்பு நடைபெற்றது. அடுத்த நாளே தமிழகத்தில் பல மாற்றங்கள் நடந்தது.
ஆப்பரேஷன் டிஸ்ஆர்ம்’ என்னும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த வேட்டையில் சுமார் 3,325 கொலைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, கொலைச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படும் 1,110 கத்திகள் மற்றும் 7 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் தற்போது அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை வாங்க வருவோரின் பெயர், முகவரி, கைப்பேசி எண்ணை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் எனவும், ஆயுதங்கள் தயாரிப்பை கண்காணிக்கவும் அனைத்து போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தமிழகத்தை உலுக்கிய மத மாற்றத்தை தட்டிக்கேட்டதற்காக கொல்லப்பட்ட திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில், 6 பேரை தேடப்படும் நபர்களாக என்.ஐ.ஏ அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக காவல்துறை எந்த அளவு என்.ஐ.ஏ விற்கு உதவி செய்கிறது மற்றும் இந்து தலைவர்கள் கொலைகள் பற்றிய பைல்களை ஆளுநர் கேட்டுள்ள்ள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.