DMK
சமீப காலமாக திமுகவிற்கு தமிழக பாஜக திமுகவிற்கு குடைச்சலை தர ஆரம்பித்துள்ளது அரசியல் வட்டராங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அவர்கள் கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் நேரடியாக திமுகவை தாக்கினார். அதற்கு பதிலளிக்க முடியாமல் திணறியது திமுக. மேலும் கோவை சென்ற முதல்வருக்கு சமூக வலைத்தளத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு காரணம் பாஜக.
மேலும் பாஜக தலைவர் இப்போது திமுகவை தாக்கி அறிக்கை விட்டுவருகிறார். கோதாவரி காவேரி இணைப்பு குறித்து திமுகவை அரசியல் செய்யாமல் வேலையை பாருங்கள் என கூறினார். தற்போது நீட் தேர்வில் திமுகவிற்கு எதிராக அறிக்கை விட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவை விட பாஜக தற்போது திமுகவை கடுமையாக எதிர்த்து வருகிறது. என்பது குறிப்பிட தக்கது.
நீட் தேர்வு குறித்து பாஜக தலைவர் எல்.முருகன் அவர்களின் அறிக்கை ; மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் ‘நீட்’ தேர்வு நடத்தப்படுகிறது. காங்கிரஸ் — தி.மு.க. கூட்டணி ஆட்சியில் தி.மு.க. வை சேர்ந்த காந்திசெல்வன் மத்திய சுகாதார துணை இணை அமைச்சராக இருந்த போது தான் நீட் தேர்வு குறித்த அறிவிப்பு மத்திய அரசின் ‘கெஜட்டில்’ முதன் முதலில் வெளியானது.
கடந்த 2017ம் ஆண்டு முதல் அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடந்து வருகிறது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ‘ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம்’ என வாக்குறுதி அளித்தார். ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய இயலாது என்பதை உணர்ந்த தி.மு.க. வினர் மக்களை ஏமாற்றும் மாயஜாலங்களில் ஈடுபட தொடங்கி உள்ளனர். சமீபத்தில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலை குழுவை ஸ்டாலின் அமைத்துள்ளார். இக்குழு செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்பதை வேண்டுமானால் ஆராயலாமே தவிர நீட் தேர்வு பற்றி எந்த புதிய விஷயத்தையும் கூற முடியாது.
வீம்புக்காக தமிழக அரசு மேற்கொள்ளும் இதுபோன்ற பொறுப்பற்ற செயல் நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்கள் மத்தியில் நிச்சயம் குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசியல் செய்யாமல் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும். இவ்வாறு முருகன் தெரிவித்துள்ளார்.