பாரத தேசத்தின் சுதந்திரப் போராட்ட வரலாற்றை எடுத்தோம். ஆனால் பெரும்பாலானவர்களின் வரலாறு தமிழகத்தைச் சேர்ந்தது தமிழகம் விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் பங்கு வகித்தது. நேதாஜி அவர்களின் இந்திய தேசிய ராணுவத்திற்கு வீரர்களை அனுப்பிய முத்துராமலிங்கத் தேவர் பற்றி முழு தகவல் பாடப் புத்தகங்களில் இல்லை அவர்களின் தியாக வரலாறு இல்லை.
சுய சார்பு எனும் சுதேசி பழக்கத்தை நாடெங்கிலும் கொண்டு சென்ற வ.உ. சிதம்பரனார் பற்றி சிறு குறிப்புகளே இடம் பெற்றுள்ளன. தனது மேடை நாடகத்தின் மூலம் சுதந்திரத் தீயை பற்ற வைத்த தியாகி விஸ்வநாததாஸ் பற்றி எந்த குறிப்புகளும் இல்லை வரலாறும் இல்லை.
இது போன்று ஏகப்பட்ட விடுதலை மாவீரர்களை பற்றிய வரலாற்றினை இடம்பெறச் செய்யாமல் திராவிட புரட்சிகளை கட்டவிழ்த்து விட்ட ஜி.யு. போப், கால்டுவெல் போன்றோரின் பொய் கட்டுரைகளே பாடத்திட்டங்களில் நிறைந்துள்ளது இந்நிலை மாற வேண்டும் தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு இடம்பெற வேண்டும் என நிகழ்ச்சி ஒன்றில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.