இன்று இந்த 5 ராசிகளுக்கு அதிஷ்டம் கொட்டபோகுது,இன்றைய பலன்.

rasipalan

rasipalan

ஒரேதேசம் ரிப்போட்டர் வாசகர்களுக்கான இன்றைய ராசிபலன்களை துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் அவர்கள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளன .இன்றைய பலன் 28.2.2024

மேஷம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். எதிரிகளால் உண்டான பிரச்சினைகள் முடிவிற்கு வரும். உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். ஆரோக்கியம் மேம்படும். கடன் பிரச்சினைகள் தீரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.

ரிஷபம் ராசி அன்பர்களே இன்று உங்கள் முயற்சி லாபமாகும். அரசுவழி செயல்கள் ஆதாயம்தரும். எதிர்பார்த்த வருமானம் ஏற்படும். உங்கள் புத்தி சாதுர்யம் வெளிப்படும். நண்பர்கள் ஆதரவுடன் முயற்சி வெற்றியாகும். பூர்வீக சொத்து விவகாரத்தில் முடிவு வரும்.

மிதுனம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளியூர் பயணம் ஆதாயமாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். உங்கள் செயல்கள் லாபமாகும். எண்ணம் நிறைவேறும்.

கடகம் ராசி அன்பர்களே இன்று திட்டமிட்டு செயல்படுவீர்கள். பழைய பிரச்சினை ஒன்று முடிவிற்குவரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இன்று வெற்றியாகும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். வருமானம் உயரும்.

சிம்மம் ராசி அன்பர்களே இன்று தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். பொருளாதார நிலை உயரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும். வர வேண்டிய பணம் வசூலாகும். குடும்பத்திற்காக தாராளமாக செலவு செய்வீர்கள்.

கன்னி ராசி அன்பர்களே இன்று மனதில் குழப்பம் அதிகரிக்கும். நன்றாக யோசிக்காமல் எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம். இன்று அமைதி காப்பது நன்மையாகும். தேவையில்லாத பிரச்சினைகள் உங்களைத்தேடி வரும். மற்றவரை நம்பி உங்கள் செயல்களை ஒப்படைக்க வேண்டாம். இறை வழிபாடு உங்கள் சங்கடங்கள் தீர்க்கும்.

துலாம் ராசி அன்பர்களே இன்று திடீர் செலவுகள் தோன்றும். பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்கள். திட்டமிட்ட செயல்கள் இழுபறியாகும். அடுத்தவரிடம் வீண் விவாதங்கள் வேண்டாம். அதனால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பொறுமை காப்பது அவசியம். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை தேவை.

விருச்சிகம் ராசி அன்பர்களே இன்று உறவினர்கள் உங்களைத்தேடி வருவார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். நிதிநிலை உயரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.

தனுசு வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த வருவாய் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். சங்கடங்கள் விலகும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் உண்டாகும். அதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.

மகரம் ராசி அன்பர்களே இன்று தந்தையுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். பெரியோரின் ஆதரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். குடும்பத்தில் உண்டான நெருக்கடி நீங்கும். புதிய முயற்சிகள் நன்மையாகும். நீங்கள் எதிர்பார்த்தவற்றில் அனுகூல நிலை ஏற்படும். இறை வழிபாடு உங்களுக்கு வழிகாட்டும்.

கும்பம் உங்கள் வார்த்தையிலும் செயல்களிலும் நிதானம் தேவை. மற்றவர்களால் சில சங்கடங்களை இன்று சந்திக்க வேண்டியதாக இருக்கும். எதிர்பாராத சங்கடங்கள் தோன்றினாலும் அதை சமாளிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.

மீனம் ராசி அன்பர்களே இன்று அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவிற்கு வரும். உங்கள் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும். பண வரவு திருப்தி தரும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் உங்கள் முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.

ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் 9840820560

Exit mobile version