இன்று அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான்

rasipalan

rasipalan

ஒரேதேசம் ரிப்போட்டர் வாசகர்களுக்கான இன்றைய ராசிபலன்களை துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் அவர்கள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளன . இன்றைய பலன் 04.03.2024.

மேஷம் ராசி அன்பர்களே இன்று இழுபறியாக இருந்த முயற்சிகள் இன்று நிறைவேறும். மனதில் இருந்த சங்கடம் விலகும். நீங்கள் எதிர்பார்த்த வரவு உண்டாகும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி மாலையில் வெற்றியாகும். நண்பர்களால் ஆதாயம் தோன்றும்.

ரிஷபம் ராசி அன்பர்களே இன்று மதியம்வரை உங்கள் செயல்கள் லாபமாகும். அதன்பிறகு எதிர்பாராத சங்கடம் உண்டாகும். மனதில் குழப்பம் தோன்றும். மற்றவருடன் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் அமைதி காப்பது நன்மையாகும். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி பலன் அளிக்கும். எதிர்பார்த்த வருவாய் வந்துசேரும். மனதில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

மிதுனம்ராசி அன்பர்களே இன்று தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் செயலில் முன்னேற்றம் காண்பீர்கள். முயற்சிகள் வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தின் சூட்சுமங்கள் புலப்படும். லாபத்திற்குரிய வழிகளைக் கண்டறிவீர்கள். நண்பர்கள் ஆலோசனை நன்மை தரும். வருவாய் உயரும்.

கடகம் ராசி அன்பர்களே இன்று இழுபறியாக இருந்த முயற்சி இன்று நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். பொருளாதாரத் தடைகள் விலகும். எதிரிகள் விலகிச்செல்வார்கள். வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் அகலும். உங்கள் செயல்களில் லாபம் ஏற்படும். உற்சாகம் அதிகரிக்கும். வருமானம் உயரும்.

சிம்மம் ராசி அன்பர்களே இன்று பங்குச்சந்தையில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். தொழிலில் புதிய தொடர்புகள் கிடைத்து முன்னேற்றம் தோன்றும். வருமானம் திருப்தி தரும். குடும்ப நிலையை உயர்த்த முயற்சிப்பீர்கள். தடைபட்டிருந்த வருவாய் வந்து சேரும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும்.

கன்னி ராசி அன்பர்களே இன்று குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். உறவுகள் வழியே ஆதாயம் தோன்றும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் அனுகூலமாகும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். நண்பர்கள் ஒத்துழைப்பால் செயல் வெற்றியாகும். முயற்சி நிறைவேறும்.

துலாம் ராசி அன்பர்களே இன்று நீண்ட நாளாக நிறைவேறாமல் இருந்த உங்கள் முயற்சி நிறைவேறும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சினை முடிவிற்கு வரும். வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். நிதிநிலையில் உயர்வு உண்டாகும். உங்கள் முயற்சி நீங்கள் எதிர்பார்த்த லாபம்தரும்.

விருச்சிகம் நேற்றுவரை இருந்த குழப்பம் விலகும். செயல்களில் தெளிவு உண்டாகும். வியாபாரம் விருத்தியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

தனுசு ராசி அன்பர்களே இன்று மதியத்திற்கு மேல் உங்களுக்குள் இனம்புரியாத குழப்பம் ஏற்படும். உங்கள் பிரச்சினைகளை இன்று மற்றவரிடம் கொண்டு செல்ல வேண்டாம். உங்களை சீண்டிப்பார்க்க சிலர் முயற்சிப்பார்கள். எந்த நிலையிலும் அமைதியை இழக்காதீர்கள். கவனமுடன் செயல்படுவது நன்மையாகும்.

மகரம் மதியத்திற்குமேல் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். வாகனம் பழுதாகி உங்களை சங்கடப்படுத்தும். அலைச்சல் அதிகரிக்கும். வருவாயைவிட செலவுகள் அதிகரிக்கும். கடன்கொடுத்தவர்கள் நெருக்கடியை ஏற்படுத்துவார்கள். புதியவர்களிடம் எச்சரிக்கை அவசியம்.

கும்பம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உங்கள் செல்வாக்கால் மற்றவர் பாராட்டிற்கு ஆளாவீர்கள். புதிய தொழில் தொடங்குவது பற்றி ஆலோசிப்பீர்கள். அரசுவழி முயற்சிகள் ஆதாயம் தரும். வருமானம் திருப்தி தரும்.

மீனம் ராசி அன்பர்களே நீண்டநாள் பிரச்சினைக்கு இன்று முடிவு வரும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். உங்கள் அனுகுமுறை லாபம்தரும். குலதெய்வ அருளால் சங்கடங்கள் நீங்கும். எதிர்பாராத வருமானத்தால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய நட்புகளின் சுயரூபம் தெரியவரும். ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் 9840820560

Exit mobile version