இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்

rasipalan

rasipalan

ஒரேதேசம் ரிப்போட்டர் வாசகர்களுக்கான இன்றைய ராசிபலன்களை துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் அவர்கள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளனஇன்றைய பலன் 9.3.2024

மேஷம் ராசி அன்பர்களே இன்று உங்கள் முயற்சியில் ஏற்பட்ட தடைகள் விலகும். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வெளியூர் பயணம் ஆதாயம்தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆறாமிட கேதுவால் அல்லல்கள் தீரும்.

ரிஷபம் ராசி அன்பர்களே இன்று  வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்கள். பத்தாமிட சூரியனால் உங்கள் செல்வாக்கு உயரும். பிரச்சினைகள் விலகும். உங்கள் செயல்களில் வேகம் உண்டாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பார்கள். லாபம் அதிகரிக்கும்.

மிதுனம் ராசி அன்பர்களே இன்று உங்கள் நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நன்மையாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பெரியோர் ஆதரவுடன் நினைத்ததை செய்துமுடிப்பீர்கள். பணவரவு மகிழ்ச்சிதரும். இறை வழிபாடு நன்மைதரும்.

கடகம் ராசி அன்பர்களே இன்று செயல்களில் சங்கடம் தோன்றும். முயற்சியில் இழுபறியான நிலை உண்டாகும். உடன் இருப்பவர்களை அனுசரித்துச்செல்வது நன்மையாகும். நினைத்த செயல்களை நிறைவேற்ற முடியாமல் போகும். குழப்பம் அதிகரிக்கும். வருமானம் இழுபறியாகும். பணிபுரியும் இடத்தில் கவனமுடன் செயல்படுவது அவசியம்.

சிம்மம் ராசி அன்பர்களே இன்று உங்கள் முயற்சிகள் எளிதாக நிறைவேறும். வருமானம் உயரும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்கள் உதவியுடன் உங்கள் முயற்சி நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்துசேரும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.

கன்னி ராசி அன்பர்களே இன்று எதிரிகள் விலகிச்செல்வார்கள். உங்கள் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். உறவினர்களால் உண்டான பிரச்சினைகள் தீரும். குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.

துலாம் ராசி அன்பர்களே இன்று  பிள்ளைகள் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவீர்கள். எதிர்பார்த்த வருவாய் வந்துசேரும். சேமிப்பு உயரும். அந்நியர்களால் உங்கள் செயல் லாபமாகும். வழக்கமான செயல்களில் லாபம் உண்டாகும். விலகிச்சென்ற உறவினர்கள் இன்று உங்களைத்தேடி வருவார்கள். இறைவழிபாடு நன்மைதரும்.

விருச்சிகம் ராசி அன்பர்களே இன்று  தாய்வழி உறவினர்கள் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் இன்று நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும். பணத்தட்டுப்பாடு நீங்கும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

தனுசு ராசி அன்பர்களே இன்று  சகோதரர்களுடன் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவிற்குவரும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நவீன பொருட்களின் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருவாய் அதிகரிக்கும்.

மகரம் ராசி அன்பர்களே இன்று வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். நினைத்ததை அடைவீர்கள். தொழிலில் இருந்த தடைகள் விலகும். உங்கள் முயற்சி நிறைவேறும். வருமானம் உயரும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.

கும்பம் ராசி அன்பர்களே இன்று ராசிக்குள் சந்திரன் இருப்பதால் குழப்பம் அதிகரிக்கும். அலைச்சல் உண்டாகும். செயல்கள் இழுபறியாகும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் எண்ணத்திற்கு மாறாக சில செயல்கள் நடைபெறும். அமைதி காப்பது நன்மையாகும்.

மீனம் ராசி அன்பர்களே இன்று அலைச்சல் அதிகரிப்பதுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். அடுத்தவரை நம்பி நீங்கள் ஈடுபடும் செயல்களில் சங்கடம் தோன்றும். பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். மறைமுக எதிரிகளால் மனதில் சங்கடம் உண்டாகும். வரவு செலவு காரணமாக குடும்பத்தில் பிரச்சினை உருவாகும். ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் 9840820560.

Exit mobile version