இன்று ஜாக்பாட் அடிக்கபோகும் ராசிகள் இதுதான் !

rasipalan

rasipalan

ஒரேதேசம் ரிப்போட்டர் வாசகர்களுக்கான இன்றைய ராசிபலன்களை துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் அவர்கள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளன .இன்றைய பலன் 5.3.2024


மேஷம் ராசி அன்பர்களே இன்று அரசு வழியில் உண்டான நெருக்கடிகள் விலகும். பெரியோர் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரம் விருத்தியாகும். ஒரு சிலர் புதிய வீடு கட்ட பூமி பூஜை செய்வீர்கள். பணத் தட்டுப்பாடு விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். லாபம் அதிகரிக்கும். உங்கள் நீண்டநாள் முயற்சி இன்று நிறைவேறும்.

ரிஷபம் ராசி அன்பர்களே இன்று உங்கள் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த பலன்களை இன்று அடைய முடியாமல் போகும். அலைச்சல் அதிகரிக்கும். செயல்களில் விழிப்புணர்வு அவசியம். சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்கள் செயல்களில் நெருக்கடிகள் ஏற்படும். எதிர்பார்ப்பில் இழுபறி உண்டாகும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

மிதுனம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த வரவு வந்துசேரும். நண்பர்கள் உதவியால் முயற்சி லாபமாகும். மற்றவரால் முடியாத ஒரு காரியத்தில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பால் உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.

கடகம் ராசி அன்பர்களே இன்று உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். வரவு அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். மற்றவர்களால் மதிக்கப் படுவீர்கள். வழக்கு விவகாரம் விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.

சிம்மம் ராசி அன்பர்களே இன்று: குடும்பத்திற்காக மற்ற வேலைகளை ஒதுக்கி வைப்பீர்கள். உங்கள் செயல்களில் தெளிவு உண்டாகும். முயற்சிகள் வெற்றியாகும்.
உங்கள் செல்வாக்கு வெளிப்படும். சங்கடங்கள் தீரும். குலதெய்வ அருளால் மற்றவர்களால் சாதிக்க முடியாத ஒன்றை சாதிப்பீர்கள். ஒருசிலர் புதிய வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

கன்னி ராசி அன்பர்களே இன்று அலுவலகத்தில் வேலை பளு உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பிரிந்துசென்ற உறவினர்கள் மீண்டும் உங்களைத்தேடி வருவார்கள். தொழிலில் உழைப்பிற்கேற்ற பலனை அடைவீர்கள்.

துலாம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். நண்பர்கள் உதவியுடன் நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். எதிர்ப்புகள் விலகும். துணிச்சலுடன் செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். உங்கள் செயல் லாபத்தில் முடியும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

விருச்சிகம் ராசி அன்பர்களே இன்று எதிர்பார்த்த வரவு வந்துசேரும். நிதிநிலை உயரும். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நலனில் அக்கறை உண்டாகும். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

தனுசு ராசி அன்பர்களே இன்று மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படும். உங்கள் செயல்களில் தடுமாற்றமும் அலைச்சலும் உண்டாகும். கவனமுடன் செயல்படுவது நன்மையாகும். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். நெருக்கடிகள் நீங்கும். நீண்டநாள் பிரச்சினை ஒன்றுக்கு தீர்வு காண்பீர்கள்.

மகரம் ராசி அன்பர்களே இன்று அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் செய்தும் ஒரு முயற்சி நிறைவேறாமல் இழுபறியாகும். வரவு செலவில் கவனம் செலுத்துவது நன்மையாகும். புதிய முயற்சி இழுபறியாகும். உங்கள் செல்வாக்கை வெளிக்காட்டுவதற்காக செலவுகள் செய்வீர்கள். கையிருப்பு கரையும்.

கும்பம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். பழைய முதலீட்டில் இருந்து எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். ஒருசிலர் புதிய இடம் வாங்குவீர்கள்.

மீனம் ராசி அன்பர்களே இன்று வேலையில் உண்டான பிரச்சினைகள் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். மற்றவரின் மதிப்பிற்கு ஆளாவீர்கள். பணவரவு திருப்திதரும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். குடும்பத்தினர் ஒத்துழைப்பால் உங்கள் முயற்சி நிறைவேறும்.ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் 9840820560

Exit mobile version