இன்று இந்த மூன்று ராசிகளுக்கு தான் யோகம்.

rasipalan

rasipalan

ஒரேதேசம் ரிப்போட்டர் வாசகர்களுக்கான இன்றைய ராசிபலன்களை துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் அவர்கள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளன . இன்றைய பலன் 02.03.2024.

இன்றைய பலன் 2.3.2024

மேஷ ராசி அன்பர்களே இன்று அலைச்சல் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் தடைகளையும் தாமதத்தையும் சந்திக்க நேரிடும். கவனமாக செயல்படுவது நன்மையாகும். எதிர்பாராத நெருக்கடிகளுக்கு ஆளாவீர்கள். பணிபுரியும் இடத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

ரிஷப ராசி அன்பர்களே இன்று உங்கள் நீண்டநாள் எண்ணம் இன்று நிறைவேறும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள். வரவேண்டிய பணம் வந்துசேரும். நிதிநிலை உயரும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பொன்பொருள் சேர்க்கை ஏற்படும். நண்பர்கள் ஆதரவால் உங்கள் முயற்சி நிறைவேறும்.

மிதுன ராசி அன்பர்களே இன்று உடலில் இருந்த சங்கடம் நீங்கும். உயர்ந்தோர் ஆதரவால் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்ப்புகள் விலகும். நினைப்பது நடந்தேறும். விரைந்து செயல்பட்டு ஒரு செயலை முடிப்பீர்கள். தடைபட்டிருந்த வருவாய் வந்துசேரும். இழுபறியாக இருந்த பிரச்சினை முடிவிற்கு வரும்.

கடக ராசி அன்பர்களே இன்று எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்ததை அடைவீர்கள். உங்கள் செயல் ஆதாயத்தை உண்டாக்கும். நினைத்தது எளிதாக நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவிற்கு வரும்.

சிம்ம ராசி அன்பர்களே இன்று தாய்வழி உறவுகளால் சங்கடங்கள் தோன்றும் என்றாலும் அதை சமாளிப்பீர்கள். உங்கள் முயற்சியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் மறைமுகத்தொல்லை அதிகரிக்கும். உங்கள் முயற்சியால் அனைத்தையும் சரி செய்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.

கன்னி ராசி அன்பர்களே இன்று நெருக்கடிகள் விலகும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். வியாபாரத்தில் உங்கள் அனுகுமுறை வெற்றியாகும். உங்களிடம் வேலை செய்பவர்களின் ஒத்துழைப்பு லாபத்தை அதிகரிக்கும்.

துலாம் ராசி அன்பர்களே இன்று குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தம்பதியர் ஒருவர் ஒருவரை புரிந்து செயல்படுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும். புதிய வேலை வாய்ப்பிற்குரிய முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பண வரவு திருப்தி தரும். திருமண வயதினருக்கு வரன் வரும்.

விருச்சிகம் ராசி அன்பர்களே இன்று உங்கள் திட்டமிடுதலில் குழப்பம் உண்டாகும். நீங்கள் நினைத்ததற்கு மாறாக சில செயல்கள் நடைபெறும். கவனமுடன் செயல்படுவது அவசியம். வேலைபளு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு பணிபுரியும் இடத்தில் பிரச்சினைகள் உண்டாகும். அமைதி காப்பது நன்மையாகும்.

தனுசு ராசி அன்பர்களே இன்று செலவுகள் அதிகரிக்கும் என்பதால் நிதானமாக செயல்படுங்கள். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதுடன் வரவு செலவில் கவனம் தேவை. அலைச்சல் அதிகரிக்கும். மற்றவரை அனுசரித்துச்செல்வதின் மூலம் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். வெளியூர் பயணம் விரயத்தில் முடியும்.

மகர ராசி அன்பர்களே இன்று உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். நீண்டநாள் நெருக்கடிகள் நீங்கும். எதிர்பாராத வருவாய் வந்துசேரும். உங்கள் செயல்கள் வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும்.

கும்பம் ராசி அன்பர்களே இன்று இழுபறியான முயற்சி லாபமாகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் செயல்களில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். உங்கள் எண்ணம் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள்.

மீனம் ராசி அன்பர்களே இன்று வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். வரவேண்டிய பணம் வந்துசேரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். மனதில் உண்டான குழப்பம் நீங்கும். பெரியோர் ஆதரவு அதிகரிக்கும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவிற்கு வரும். பணவரவால் சங்கடம் விலகும்.

ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் 9840820560

Exit mobile version