இன்றைய தலைப்புச் செய்திகள்!

ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி.

ஜிஎஸ்டி குறைப்பால் நாட்டின் வளர்ச்சி வேகமெடுக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை. உள்நாட்டு பொருட்களை மக்கள் அதிகம் பயன்படுத்தவும் வேண்டுகோள்.

ஜிஎஸ்டி இழப்பீட்டை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் மாநிலங்களின் கோரிக்கை என்ன ஆனது? 8 ஆண்டுகளில் 55 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலித்ததை மக்கள் மறக்க மாட்டார்கள் என காங்கிரஸ் விமர்சனம்.

அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்

பீகாரைப் போல பிற மாநிலங்களிலும் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம். வரும் 30ம் தேதிக்குள் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் தயாராகுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவு.

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த முக்கிய நாடுகள். கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், போர்ச்சுகல் ஆகிய நாடுகள் அங்கீகாரம்

அமெரிக்காவிற்கு போட்டியாக கே-விசாவை அறிமுகம் செய்கிறது சீனா. உலகம் முழுவதும் திறமையான பணியாளர்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி.

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் இந்தியா அபாரம். பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்.

Exit mobile version