இன்று ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள் இதுதான் !

rasipalan

rasipalan

ஒரேதேசம் ரிப்போட்டர் வாசகர்களுக்கான இன்றைய ராசிபலன்களை துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் அவர்கள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளன  இன்றைய பலன் 7.3.2024

மேஷம் ராசி அன்பர்களே இன்று  தடைப்பட்டிருந்த வேலைகள் முடியும். உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீண்டநாள் எண்ணம் பலிதமாகும். பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் விலகி சாதகமான நிலை உண்டாகும். வருமானம் நிறைவை தரும்.

ரிஷபம் ராசி அன்பர்களே இன்று  வருவாயில் இருந்த தடைகள் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். நண்பர்கள் ஆதரவால் உங்கள் விருப்பம் நிறைவேறும். தெய்வ அனுகூலம் உண்டாகும். பெரியோர் ஆலோசனையுடன் நீங்கள் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். உங்கள் செயல் இழுபறியானாலும் முடிவு வெற்றியாகும்.

மிதுனம் ராசி அன்பர்களே இன்று  முயற்சியில் சங்கடம் உண்டானாலும் இறுதியில் வெற்றி அடைவீர்கள். பண நெருக்கடி விலகும். மற்றவரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். பணிபுரியும் இடத்தில் எதிர்ப்புகள் உண்டாகி மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும். செயல்களில் நிதானம் அவசியம். புதிய முயற்சிகளில் தடைகள் தோன்றும்.

கடகம் ராசி அன்பர்களே இன்று  குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். புதிய பொருள் சேர்க்கையும் நிம்மதியும் உண்டாகும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். எதிர்பார்த்த வருவாய் வந்துசேரும். வாழ்க்கைத்துணையால் வளம் உண்டாகும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்

சிம்மம் ராசி அன்பர்களே இன்று  முயற்சியில் வெற்றி காண்பீர்கள். உடல்நிலையில் உண்டான சங்கடம் நீங்கும். நீண்டநாள் பிரச்சினைக்கு முடிவு காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.

கன்னி: ராசி அன்பர்களே இன்று  முயற்சிகள் நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வந்துசேரும். நிதிநிலை உயரும். ஜென்ம கேதுவால் மனம் குழப்பமடையும். குடும்பத்தினர் ஆதரவுடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பிள்ளைகளால் நன்மைகள் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும்.

துலாம் ராசி அன்பர்களே இன்று  உங்கள் பலம் மற்றவர்களுக்கு தெரியவரும். செயல்களில் ஆதாயம் உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். செயல்களில் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்கள் ஆலோசனைக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் உங்கள் முயற்சிகளில் லாபம் காண்பீர்கள். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். திருமண வயதினருக்கு வரன் வரும்.

விருச்சிகம் ராசி அன்பர்களே இன்று  துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். உங்கள் நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். நீண்டநாள் பிரச்சினை முடிவிற்குவரும். உங்கள் செல்வாக்கு உயரும்.

தனுசு ராசி அன்பர்களே இன்று  குழப்பம் விலகி தெளிவு ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். உங்கள் செயலில் சாதகமான நிலை ஏற்படும். வரவு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயம் காண்பீர்கள். பொருளாதார நிலை உயரும்.

மகரம் ராசி அன்பர்களே இன்று  மனதில் தேவையற்ற குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் கவனம் செலுத்த முடியாமல் போகும். பணிபுரியும் இடத்தில் விழிப்புணர்வு அவசியம். உங்கள் மனதை மாற்றக்கூடிய வகையில் சிலரின் செயல்பாடு இருக்கும். வெளி நபர்களால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டிவரும்.

கும்பம் ராசி அன்பர்களே இன்று  அலைச்சல் அதிகரிக்கும். திடீர் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்தவற்றில் தடையும் தாமதமும் உண்டாகும். வரவு செலவில் நிதானம் அவசியம். உங்கள் செயல்களில் சங்கடம் தோன்றும். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் மாறும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்துகொள்ளாமல் போவார்கள்.

மீனம் ராசி அன்பர்களே இன்று  பண வரவில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நெருக்கடிகள் விலகும். நீண்டநாள் பிரச்சினைகள் முடிவிற்குவரும். எதிர்பார்த்த வருமானம் வரும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் 9840820560

Exit mobile version