இன்றைய தலைப்புச் செய்திகள்!

○ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை திமுக எம்.பி.க்கள் கூட்டம்; வரும் திங்கட்கிழமை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை.

○ வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி புயலாக மாற வாய்ப்பு; தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

○ 2026 சட்டப்பேரவைத் தேர்தல் அதிமுகவுக்கு வாழ்வா, சாவா தேர்தல் எனக் கூறிய கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் மறுப்பு; 2026-ல் அதிமுக நிச்சயமாக ஆட்சியைப் பிடிக்கும் என திட்டவட்டம்.

○ தமிழ்நாட்டில் 135 மருத்துவ இடங்களுக்கான சிறப்பு கலந்தாய்வு; வரும் 25-ம் தேதி முதல் நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு.

“அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி கோரினால், மறுக்கப்படும்” – அமைச்சர் பொன்முடி!

நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!

“சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி!” – நடிகை கஸ்தூரி!

○ அதானி முறைகேடு குறித்து அமெரிக்கா விசாரிக்கும்போது, இந்தியாவில் விசாரணை நடைபெறாதது ஏன் என்று ராகுல் காந்தி கேள்வி; அதானி மற்றும் செபி தலைவர் மாதவியை கைது செய்ய வலியுறுத்தல்.

○ அசாம் மாநிலத்தில், செங்கல் சூளைக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் குட்டியுடன் சிக்கிய ஆறு யானைகள்; பொக்லைன் இயந்திரம் உதவியுடன் கரையை சமன்செய்து மீட்பு.

○ காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு; இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் அதிகம் பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்.

○ இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் சற்று நேரத்தில் தொடக்கம்; ஆஸ்திரேலிய மண்ணில் மீண்டும் சாதிக்கும் முனைப்பில் இந்திய அணி.

Exit mobile version