இந்த அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான் !

rasipalan

rasipalan

ஒரேதேசம் ரிப்போட்டர் வாசகர்களுக்கான இன்றைய ராசிபலன்களை துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் அவர்கள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளன 

இன்றைய பலன் 6.3.2024

மேஷம் நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். வழக்கு விவகாரம் வெற்றியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை சரிசெய்வீர்கள். பண நெருக்கடிகள் விலகும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.

ரிஷபம் ராசி அன்பர்களே இன்று தடைகளைத்தாண்டி உங்கள் செயலில் லாபம் காண்பீர்கள். எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். சங்கடங்கள் விலகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள் என்றாலும் அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் தடைகள் உண்டாகும். கவனமுடன் செயல்பட நெருக்கடி உண்டாகாமல் போகும்.

மிதுனம் ராசி அன்பர்களே இன்று காலையில் உங்கள் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றியைக் காண்பீர்கள். மாலையில் நெருக்கடிகள் உண்டாகும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம். வியாபாரத்தில் கவனமாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயம் தரும். உடல் நலனில் அக்கறை அவசியம்.

கடகம் ராசி அன்பர்களே இன்று எதிர்ப்புகள் விலகும். உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகும். குடும்பத்தினர் ஆதரவுடன் நீண்டநாள் பிரச்சினைக்கு முடிவு காண்பீர்கள். உறவுகளிடம் உண்டான பிரச்சினைகளை பேசித்தீர்ப்பீர்கள். உங்கள் முயற்சியில் ஆதாயம் காண்பீர்கள். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும்.

சிம்மம் ராசி அன்பர்களே இன்று துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குலதெய்வ அருள் உண்டாகும். உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும். உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். பொருளாதார நிலை உயரும்.

கன்னி ராசி அன்பர்களே இன்று உங்கள் முயற்சியில் தடைகளை சந்தித்தாலும் போராடி வெல்வீர்கள். பொருளாதார நிலை உயரும். சங்கடங்கள் விலகும். அலுவலகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும்.

துலாம் ராசி அன்பர்களே இன்று உங்கள் முயற்சி வெற்றியாகும். தேவைகள் நிறைவேறும். பகைவர்களின் தொல்லை விலகும். திருமண வயதினருக்கு வரன்வரும். குரு பகவான் பார்வையால் உங்கள் செல்வாக்கு உயரும். நெருக்கடிகள் நீங்கும். இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

விருச்சிகம் ராசி அன்பர்களே இன்று பணவரவு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். நீங்கள் எதிர்பார்த்த வரவுவரும். புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகும். உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும்.

தனுசு ராசி அன்பர்களே இன்று அலுவலகத்தில் உங்கள்நிலை உயரும். நீங்கள் எதிர்பார்த்த வரவுகள் வந்துசேரும். முயற்சி வெற்றியடையும் மனதில் இருந்த குழப்பம் விலகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். விருப்பங்கள் பூர்த்தியாகும்.

மகரம் இன்று மாலை வரையில் உங்கள் செயல்களில் சங்கடம் தோன்றும். செலவு அதிகரிக்கும். அதன்பின் நிலைமை சீராகும். முயற்சி லாபமாகும். தேவையற்ற அலைச்சல் ஏற்பட்டு சங்கடத்திற்கு ஆளாவீர்கள். உங்கள் வேலைகளும் இழுபறியாகும். மனதில் குழப்பம் ஏற்பட்டு விலகும்

கும்பம் ராசி அன்பர்களே உங்கள் செயல்களில் இன்று மாலைவரை லாபம் உண்டாகும். நிதிநிலை உயரும். அதன்பின் திடீர் செலவுகள் தோன்றும். கையிருப்பு கரையும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வந்துசேரும் என்றாலும் செலவுகள் அதிகரிக்கும். பிரச்சினைகள் உங்களைத்தேடி வரும். கவனமுடன் செயல்படுவது நன்மையாகும்.

மீனம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபம்தரும். எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். நண்பர்களை அனுசரித்துச்செல்வது நன்மையாகும். ஜென்ம ராகுவால் ஆசைகள் அதிகரிக்கும் என்றாலும் விரய சூரியனால் அதனால் சங்கடங்களும் தோன்றும். செயல்களில் நிதானம் அவசியம்.ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் 9840820560

Exit mobile version