இன்றைய இராசிபலன் 13.2.2024 செவ்வாய் கிழமை நல்லதே நடக்கும்!.

rasipalan

rasipalan

ஒரேதேசம் ரிப்போட்டர் வாசகர்களுக்கான இன்றைய ராசிபலன்களை துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் அவர்கள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

*மேஷ ராசி நேயர்களே இன்று அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் தோன்றும். வரவு செலவில் சில சங்கடங்களை அடைவீர்கள். முயற்சிகள் இழுபறியாகும். திட்டமிட்டிருந்த வேலைகள் தள்ளிப்போகும். பணிபுரியும் இடத்தில் பிரச்சினைகள் தோன்ற வாய்ப்பிருப்பதால் செயல்களில் கவனம் தேவை.

*ரிஷப ராசி அன்பர்களே இன்று உங்கள் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும். புதிய பொருட்கள் சேரும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். திட்டமிட்டிருந்த செயலை செய்து முடிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள்.

*மிதுன ராசி நேயர்களே இன்று வியாபாரத்தில் உங்கள் முயற்சி ஆதாயமாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். நீங்கள் மேற்கொண்ட முயற்சி எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

கடக ராசி அன்பர்களே இன்று வரவு செலவில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து அதைப் பூர்த்தி செய்வீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். தடைப்பட்ட வேலைகள் மீண்டும் நடைபெற ஆரம்பிக்கும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வழக்கு விவகாரம் முடிவிற்கு வரும்.

சிம்ம ராசி நேயர்களே இன்று உங்கள் எதிர்பார்ப்புகள் இழுபறியாகும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும். செயல்களில் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள். அலைச்சல் உண்டாகும் பணியிடத்தில் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது அவசியம். இயந்திரப் பணியாளர்கள் கவனமுடன் செயல்படுவது நன்மையாகும்.

கன்னி ராசி நேயர்களே இன்று உங்கள் முயற்சியில் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் செயல் நிறைவேறும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் வரும்.

*துலாம் ராசி அன்பர்களே இன்று போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். எதிர்ப்புகளை முறியடித்து உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். நண்பர்கள் ஒத்துழைப்பால் ஒரு செயல் லாபமாகும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். பணியிடத்தில் உங்கள் உழைப்பிற்கு மதிப்புண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.

*விருச்சிக ராசி நேயர்களே இன்று மற்றவரை நம்பி ஒப்படைக்கும் வேலைகள் இழுபறியாகும். உங்கள் செயல்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சி நிறைவேறும். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு உங்களை உற்சாகப்படுத்தும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

*தனுசு ராசி அன்பர்களே இன்று உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ள கடுமையாக உழைப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். நண்பர்கள் ஆதரவுடன் நினைத்ததை அடைவீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும். முயற்சி வெற்றியாகும்.

*மகர ராசி நேயர்களே இன்று துணிச்சலுடன் செயல்பட்டு நீண்டநாள் முயற்சி ஒன்றில் லாபம் காண்பீர்கள். எதிரிகள் விலகிச்செல்வார்கள். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பு வந்துசேரும். மற்றவர்கள் உங்களைப் பாராட்டுவார்கள்

*கும்ப ராசி நேயர்களே இன்று உங்களின் செயல்களில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். தடைபட்டிருந்த முயற்சி இன்று நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். உங்கள் வார்த்தைக்கு அலுவலகத்தில் மதிப்புண்டாகும். வரவேண்டிய பணம் வந்துசேரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

*மீன ராசி அன்பர்களே இன்று மனதில் குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். பணிகளில் விழிப்புணர்வு அவசியம். புதிய ஒப்பந்தங்கள் இன்று வேண்டாம். கடந்தகால பிரச்சினை ஒன்று மீண்டும் தலையெடுக்கும் என்பதால் எச்சரிக்கை அவசியம். முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும்.

Exit mobile version