இன்றைய இராசிபலன் 15.02.2024 வியாழக்கிழமை நல்லதே நடக்கும்!.

rasipalan

rasipalan

இன்றைய இராசிபலன் 15.02.2024 வியாழக்கிழமை நல்லதே நடக்கும்!.

ஒரேதேசம் ரிப்போட்டர் வாசகர்களுக்கான இன்றைய ராசிபலன்களை துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் அவர்கள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளன

*மேஷ ராசி நேயர்களே இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இன்று வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு தகவல் வரும். உங்கள் நீண்ட நாள் விருப்பங்கள நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பெரியவர்கள் ஆதரவால் அனுகூலம் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும்.

*ரிஷப ராசி நேயர்களே இன்று வேலைபளு அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் தோன்றும். உங்கள் எதிர்பார்ப்புகள் இழுபறியாகும். முயற்சி தள்ளிப்போகும். வரவு செலவில் கவனம் அவசியம். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் முக்கியமான பிரச்சினைகள் முடிவிற்குவரும்.

*மிதுன ராசி அன்பர்களே இன்று வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தடைபட்டிருந்த வேலைகள் மீண்டும் தொடரும். எதிர்பார்த்த வரவு வந்துசேரும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பழைய முதலீட்டில் இருந்து பணம் வரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்

*கடக ராசி நேயர்களே இன்று வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வாய்ப்புகளைப் பயன்படுத்தி உங்கள் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஒரு சிலருக்கு புதிய வேலை அமையும். தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை மேற்கொள்வீர்கள். உங்கள் செயல் லாபமாகும்.

சிம்ம ராசி அன்பர்களே இரண்டு நாட்களாக ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். தடைபட்ட செயல்களில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சினை முடிவிற்கு வரும்.

கன்னி ராசி அன்பர்களே இன்று உங்கள் செயல்களில் எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும். அலைச்சல் அதிகரிக்கும். முயற்சியில் அக்கறை கொள்வது அவசியம். செயல்களில் தாமதம் ஏற்படும். அடுத்தவர் விஷயங்களில் இன்று தலையிட வேண்டாம். எதிர்பார்த்த வருமானத்தில் இழுபறி உண்டாகும். மனதில் குழப்பமும் உழைப்பு அதிகரிக்கும்.

*துலாம் ராசி அன்பர்களே இன்று ஏழாமிட சந்திரனால் உங்கள் முயற்சிகள் எளிதாக நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் ஆலோசனையை மற்றவர்கள் ஏற்பார்கள். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உங்கள் செயல்கள் வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும், மகிழ்ச்சி அதிகரிக்கும்.

*விருச்சிக ராசி நேயர்களே இன்று தடைகளை விலக்கி வைத்து புதிய பாதையில் பயணம் செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். எதிர்ப்புகள் விலகும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும், புதிய முயற்சி வெற்றியாகும். மற்றவர்களால் முடிக்க முடியாத ஒரு வேலையை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.

*தனுசு ராசி அன்பர்களே இன்று குடும்பத்தின் அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகள் உங்கள் செயல்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வருமானம் அதிகரிக்கும். மனக்குழப்பம் விலகி தெளிவடைவீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வெளியூர் பயணத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை அடைவீர்கள்.

*மகர ராசி அன்பர்களே இன்று பயணத்தால் அலைச்சல் அதிகரித்தாலும் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். நண்பர்கள் உங்கள் செயல்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
புதிய முயற்சி நிறைவேறும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

*கும்ப ராசி நேயர்களே இன்று துணிச்சலாக செயல்படுவீர்கள், நீண்ட நாட்களாக முடிவிற்கு வராமல் இருந்த ஒரு பிரச்சினை இன்று முடிவிற்கு வரும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகிச் செல்வர். எதிர்பார்த்த வரவு வந்துசேரும். நிதிநிலை உயரும்.

*மீன ராசி அன்பர்களே இன்று வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். நீண்டநாள் முயற்சி ஒன்று நிறைவேறும். நீண்ட நாள் பிரச்சினை ஒன்று முடிவிற்கு வரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். ஒருசிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.

Exit mobile version