இன்றைய இராசி பலன் 16.02.2024 வெள்ளி கிழமை..நல்லதே நடக்கும்! !.

rasipalan

rasipalan

ஒரேதேசம் ரிப்போட்டர் வாசகர்களுக்கான இன்றைய ராசிபலன்களை துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் அவர்கள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளன

மேஷ ராசி நேயர்களே இன்று உங்கள் முயற்சியில் இருந்த தடைகள் விலகும். செயல்கள் நீங்கள் எதிர்பார்த்த பலன்தரும். குழப்பங்கள் மறையும். எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். இறை வழிபாட்டால் மனதில் உள்ள குழப்பம் நீங்கும். உங்கள் பணியில் மட்டும் முழுமையாக கவனம் செலுத்துவது நன்மையாகும்.

*ரிஷப ராசி அன்பர்களே இன்று வேலைபளு அதிகரிக்கும். திடீர் செலவுகளால் சங்கடம் உண்டாகும். புதிய முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நன்மையாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம்தேவை. உங்கள் முயற்சியில் எதிர்பாராத இழுபறி உண்டாகும். பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.

*மிதுன ராசி நேயர்களே இன்று உங்கள் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி காண்பீர்கள். வரவு அதிகரிக்கும். நிதிநிலை உயரும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். வராமல் இருந்த பணம் வந்து சேரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.

*கடக ராசி அன்பர்களே இன்று வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் ஏற்படும். உங்கள் அனுகுமுறையால் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். நீண்டநாள் எண்ணம் இன்று நிறைவேறும்.

*சிம்ம ராசி நேயர்களே இன்று குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பெரியோர் ஆதரவுடன் உங்கள் செயல் லாபமாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அனுகூலத்தை அடைவீர்கள். தடைகள் விலகும், பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய முயற்சிகள் இன்று எளிதாக நிறைவேறும். நிதிநிலை உயரும்.
குடும்பத்தினர் விருப்பம் அறிந்து செயல்படுவீர்கள்.

கன்னி ராசி அன்பர்களே இன்று உங்கள் எதிர்பார்ப்புகளில் தடை, தாமதம் ஏற்படும். மனதில் இனம்புரியாத சங்கடம் தோன்றும். பண விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம். செயல்களில் இடையூறுகளை சந்திப்பீர்கள். வரவு இழுபறியாகும். குடும்பத்தில் குழப்பநிலை ஏற்படும். பயணத்தில் கூடுதல் கவனம் தேவை.

*துலாம் ராசி நேயர்களே இன்று உங்கள் எண்ணம் எளிதாக நிறைவேறும். நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். மனதில் தெளிவு ஏற்படும். இரவு சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை அவசியம். உங்கள் திறமைகள் வெளிப்படும். நினைத்ததை அடைவீர்கள். உங்களை விட்டு விலகிச்சென்றவர்கள் மீண்டும் வந்திணைவார்கள். வருமானம் உயரும்.

*விருச்சிக ராசி அன்பர்களே இன்று நீண்டநாள் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். போட்டியாளர்கள் விலகுவார்கள். இழுபறியாக இருந்த விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். முயற்சி எளிதாக நிறைவேறும். செல்வாக்கு உயரும். மறைமுகமாக தொல்லைகள் கொடுத்தவர்கள் விலகிச் செல்வார்கள். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

*தனுசு ராசி நேயர்களே இன்று உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். எதிர்பாராத வரவால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும், பிள்ளைகள் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். உங்கள் செயல் லாபமாகும்.

*மகர ராசி அன்பர்களே இன்று தொழிலை விரிவு செய்வது குறித்து யோசிப்பீர்கள். நட்புகளால் நெருக்கடி விலகும், உங்கள் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். உங்கள் திறமை வெளிப்படும். உழைப்பிற்கேற்ற வருவாய் உண்டாகும். எதிர்ப்புகளை சமாளித்து உங்கள் எதிர்பார்ப்பை அடைவீர்கள்.

*கும்ப ராசி நேயர்களே இன்று உங்கள் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும், வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்வீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வருமானத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் உண்டான சங்கடம் நீங்கும்.

*மீன ராசி அன்பர்களே இன்று பண வரவில் இருந்த தடைகள் விலகும். நினைத்ததை சாதிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்புண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

Exit mobile version