இன்றைய இராசி பலன் 23.02.2024 வெள்ளி கிழமை..நல்லதே நடக்கும்!..

rasipalan

rasipalan

ஒரேதேசம் ரிப்போட்டர் வாசகர்களுக்கான இன்றைய ராசிபலன்களை துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் அவர்கள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளன

மேஷ ராசி அன்பர்களே
உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும். வழக்கு சாதகமாகும் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். மற்றவர் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவிற்கு வரும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். திட்டமிட்ட செயல் லாபமாகும்

ரிஷப ராசி அன்பர்களே
துணிவுடன் செயல்படுவீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்சினைகளை பேசி தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வீடுதேடி வரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சினையில் முடிவு தோன்றும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.

மிதுன ராசி அன்பர்களே
உற்சாகமாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். நிதிநிலை உயரும். புதியபொருள் சேரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம்வரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

கடக ராசி அன்பர்களே
மனதில் குழப்பம் அதிகரிக்கும். கவனக்குறைவால் உங்கள் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். செயல்களில் நிதானம் அவசியம். வேலைபளு அதிகரிக்கும். உங்களையும் அறியாமல் தடுமாற்றத்திற்கு ஆளாவீர்கள். செயல்களில் விழிப்புணர்வு தேவை.

சிம்ம ராசி அன்பர்களே
எதிர்பாராத செலவுகள் தோன்றும். பணப் பரிவர்த்தனையில் கவனம் தேவை. புதிய முயற்சிகளும், வேறு சிந்தனையும் இன்று வேண்டாம். விழிப்புடன் செயல்படுவதால் விரயங்களைத் தவிர்க்க முடியும். குடும்பத்தினரால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். கையிருப்பு கரையும்.

கன்னி ராசி அன்பர்களே
நீங்கள் எதிர்பார்த்த பணம் இன்று வந்துசேரும். மற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். பழைய கடன்களை அடைப்பீர்கள். கடனாக கொடுத்த பணம் வந்துசேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள். குடும்பத்தில் நிம்மதியான சூழல் உண்டாகும்.

துலாம் ராசி அன்பர்களே
வியாபாரத்தில் உங்கள் அனுகுமுறை லாபத்தை உண்டாக்கும். எதிர்பார்த்த வருவாய் உண்டாகும். பழைய பிரச்சினைகள் முடிவிற்குவரும். நண்பர்கள் வழியே வாய்ப்புகள் உங்களைத்தேடி வரும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

விருச்சிக ராசி அன்பர்களே
நீங்கள் மேற்கொள்ளும் செயலில் ஆதாயம் காண்பீர்கள். பகைவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். எதிர்பார்த்த பணம் வரும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். கேட்ட இடத்தில் கேட்ட உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும்.

தனுசு ராசி அன்பர்களே
நேற்றுவரை இருந்த சங்கடம் நீங்கும். முயற்சிகளில் ஏற்பட்ட தடைகள் விலகும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். உதவி செய்வதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் காணாமல் போவார்கள் என்பதால் கவனமுடன் செயல்படுங்கள். புதிய முயற்சி இன்று வேண்டாம்.

மகர ராசிஅன்பர்களே
நண்பர்களால் உங்கள் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். எதிர்பார்த்த பணம் வந்துசேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர்கள்.

கும்ப ராசி அன்பர்களே
உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். உங்கள் செல்வாக்கு உயரும். வழக்கு விவகாரத்தில் சாதகம் தோன்றும். போட்டியாளர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். உங்கள் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் தோன்றிய நெருக்கடி விலகும்

மீன ராசி அன்பர்களே
நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். நீண்டநாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள் வியாபாரத்தில் உண்டான பிரச்சினைகள் முடிவிற்கு வரும். உங்கள் முயற்சி லாபம்தரும். கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும். நிதிநிலை உயரும்.

Exit mobile version