இன்றைய தலைவரே நாளைய முதல்வரே! தெறிக்கவிடும் பா.ஜ.க இளைஞரணி! அண்ணாமலைக்கு பெருகும் ஆதரவு!

பா.ஜ.க வில் கடந்த வருடம் இணைந்தார் கர்நாடக சிங்கம் அண்ணாமலை ஐ.பி.எஸ் மோடி மீதும் பா.ஜ.கவின் சித்தாந்தத்தின் மீதும் அளப்பரிய பற்று கொண்டவர் தான் இந்த அண்ணாமலை. இதன் காரணமாக பாஜகவில் இணைந்தார். அவர் ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்று கூறப்பட்ட வந்த நிலையில் பாஜகவில் இணைந்தது குறிப்பிடதக்கத்து. அண்ணாமலை அரசியலுக்கு வருவதற்கு முன்னேரே இளைஞர்களின் ஆதரவு ரசிகர்கள் என தனிப்பட்ட செல்வாக்கு வைத்திருந்தார்.

கடந்த காலகட்டத்தில் பல்வேறு சமுதாய பணிகளை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர். அதன் பின்னரே அவர் பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக மாநிலத் துணைத் தலைவர் பதவி , பின்னர் கடந்த சட்டமன்ற தேர்தலில் (2021) அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக களம் கண்டார்.

இவரின் பேச்சில் தனித்துவம் இருக்கும் அமைதியான முறையில் பேசுபவர் அனைவர்க்கும் மரியாதை கொடுப்பவர் கோபப்பட்டால் சிங்கம் அண்ணாமலையாக மாறுபவர் அதற்கு எடுத்துக்காட்டு தேர்தல் பிரசாரத்தின் போது திமுக கரூர் சட்டமன்ற வேட்பாளரை எச்சரிக்கை விடும் தோணியில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்

தமிழக பா.ஜ.கவின் தலைவராக இருந்தவர் எல்.முருகன் அவர்கள். மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் எல்.முருகன் அவர்களுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் பாஜக தலைவியார் பதவி காலியானது. மாநிலத் தலைவர் பதவியை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலைக்கு வழங்கினர் தேசிய பா.ஜ.க. இளைஞர்களின் நாயகனாக கருதப்படும் அண்ணாமலைக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டதை பா.ஜ.கவினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றர்கள்.

பட்டாசுகளை வெடித்தும், தமிழகம் முழுவதும் சுவரொட்டி ஒட்டியும்மாநில தலைவர் அண்ணாமலைக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலைய்ல் இன்று காலை கரூர் மாவட்டத்தில் மாவட்ட இளைஞரணி சார்பாக கரூர் நகரின் முக்கிய இடங்களான பேருந்து நிலையம், கோவை ரோடு, ஜவகர் பஜார், பழைய பைபாஸ் ரோடு உள்ளிட்ட பல இடங்களில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வாழ்த்தும் விதமாக இன்றைய தமிழகத்தின் தலைவரே “நாளைய முதல்வரே” என்ற வாசகத்துடன் சுவரொட்டிகள் ஆயிரக்கணக்கில் ஒட்டப்பட்டுள்ளது. “நாளைய முதல்வரே” என்ற வாசகத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள விவகாரம்தமிழக முழுவதும் கவனம் பெற்றது

Exit mobile version