இன்றைய இராசி பலன் 10.02.2024 சனிக்கிழமை…. நல்லதே நடக்கும்…

rasipalan

rasipalan

ஒரேதேசம் ரிப்போட்டர் வாசகர்களுக்கான இன்றைய ராசிபலன்களை துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் அவர்கள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம் : நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு விவகாரம் இன்று முடிவிற்கு வரும். மதியத்திற்குமேல் பணவரவு உண்டாகும். உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். எதிர்பாராத வருமானம் வரும். உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும்.

ரிஷபம் : வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். வருமானம் அதிகரிக்கும். நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். வியாபாரம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். பெரியோர் ஆலோசனைகள் நன்மை தரும். அந்நியர் உதவியால் உங்கள் முயற்சி நிறைவேறும்.

மிதுனம் : வருமானத்திற்குரிய வழிகளைக் கண்டறிவீர்கள். செயல்களில் இருந்த தடைகள் விலகும். உங்கள் முயற்சி லாபமாகும். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். உங்கள் எண்ணம் நிறைவேறும். இழுபறியாக இருந்த விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.

கடகம் : காலையில் உங்கள் செயல் லாபமாகும். அதன்பின் அலைச்சல் அதிகரிக்கும். மனம் சோர்வடையும். புதிய முயற்சிகள் இழுபறியாகும்.நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் இன்று குழப்பம் ஏற்படும். பயணத்தில் கவனம் தேவை. புதிய நபர்களிடம் உங்கள் ரகசியங்களை வெளியிட வேண்டாம்.

சிம்மம் : உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். வியாபாரிகள் எண்ணம் நிறைவேறும் வரவு அதிகரிக்கும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பால் உங்கள் செயல் வெற்றியாகும்.

கன்னி : உறவினருக்கு ஏற்பட்ட பிரச்சினையை முன்நின்று தீர்த்து வைப்பீர்கள். இழுபறியாக இருந்த சொத்து விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். செயல்களில் உண்டான தடைகள் விலகும். எதிர்ப்பு அகலும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

துலாம் : குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மேலை நாட்டு தொடர்பு ஒன்றால் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த வருமானம் வரும். செயல்களில் அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் உங்கள் முயற்சியில் வெற்றி உண்டாகும். சொத்து விவகாரத்தில் சாதகமான நிலை எற்படும்.

விருச்சிகம் : அலைச்சல் அதிகரித்தாலும் எதிர்பார்த்த வருமானம் வந்துசேரும். நட்பால் மகிழ்ச்சி உண்டாகும். ஆலய வழிபாட்டில் பங்கேற்பீர்கள். வேலைகளில் டென்ஷன் அதிகரிக்கும். தாய்வழி உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த வருவாய் வரும்.

தனுசு : நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பணத்தேவை பூர்த்தியாகும். உறவினர்கள் வழியே நலம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.

மகரம் : மனதில் இருந்த குழப்பம் விலகும். எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்களைக் கொண்டாடுவார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை சரி செய்வீர்கள் பணவருவாய் அதிகரிக்கும். கடன்களை அடைப்பீர்கள்.

கும்பம் : நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். நீங்கள் ஈடுபடும் முயற்சியில் லாபம் காண்பீர்கள். வரவு செலவில் இருந்த சங்கடம் நீங்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். கடந்த கால அனுபவங்களைக் கொண்டு உங்கள் வளர்ச்சிக்கு வழி காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.

மீனம் : மதியத்தில் இருந்து உங்கள் செயல்களில் நெருக்கடி உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். வரவு செலவில் கூடுதல் கவனம் தேவைப்படும். தேவையில்லாத பிரச்சினைகள் உங்களைத்தேடிவரும். வரவைவிட செலவு அதிகரிக்கும். குடும்பத்தினருடன் மனக்கசப்பு உண்டாகும்.

Exit mobile version