இன்றைய இராசி பலன் 7.02.2024 புதன் கிழமை…. நல்லதே நடக்கும்..

rasipalan

rasipalan

ஒரேதேசம் ரிப்போட்டர் வாசகர்களுக்கான இன்றைய ராசிபலன்களை துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் அவர்கள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம் தடைபட்டிருந்த முயற்சிகள் இன்று எளிதாக நிறைவேறும். மற்றவர்களால் செய்ய முடியாத ஒரு செயலை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்வீர்கள். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். நிதிநிலை உயரும்.

ரிஷபம் பழைய பிரச்சினைகள் முடிவிற்குவரும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்துசேரும். மனதில் இருந்த குழப்பம் விலகும். பூமி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகளில் எச்சரிக்கை அவசியம்.

மிதுனம் நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வருவாய் வந்துசேரும். எதிரிகளால் உண்டான சங்கடங்கள் விலகும். வாழ்க்கைத் துணையால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.

கடகம் வியாபாரம் விருத்தியாகும். உங்களுக்குத் எதிராக செயல் பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். ஆதாயம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த செயல் லாபமாகும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும்.

சிம்மம் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். சொத்து விவகாரத்தில் இருந்த பிரச்சினை முடிவிற்குவரும். உடல்நிலை சீராகும். எதிர்பார்த்த தகவல் வந்துசேரும். இழுபறியான விவகாரம் முடிவிற்குவரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

கன்னி
நீங்கள் எதிர்பார்த்த வரவு வந்து சேரும். குடும்பத்திற்காக சேமிப்பை ஏற்படுத்துவீர்கள். ஒருசிலர் புதிய சொத்து வாங்குவீர்கள். வியாபாரத்தில் உங்கள் அனுகுமுறையால் லாபம் உண்டாகும். அரசு வழி முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நெருக்கடிகள் நீங்கும்.

துலாம் நெருக்கடிகள் நீங்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வந்துசேரும். நெருக்கடிகளில் இருந்து மீளுவீர்கள். நட்பு வட்டத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும்.

விருச்சிகம் வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாள்வீர்கள். உங்கள் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். சொத்து வழியிலான சங்கடங்கள் விலகும். நீங்கள் எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

தனுசு
இழுபறியாக இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயம் அடைவீர்கள். மனதில் இருந்த குழப்பம் விலகும். செயல்களில் உண்டான சங்கடம் நீங்கும். அலுவலகத்தில் உங்கள் செயலை மற்றவர்கள் பாராட்டுவர். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன்பாக படித்து பார்க்கவும்.

மகரம் எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். செயல்களில் கவனம் அவசியம். உடன் பணிபுரிபவர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். அலைச்சலால் சோர்வு அடைவீர்கள். உங்கள் முயற்சிகளில் நெருக்கடி அதிகரிக்கும்.

கும்பம் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் உங்கள் முயற்சி வெற்றியாகும்.
நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். முயற்சியில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும்.

மீனம் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நீங்கள் நினைத்தவை இன்று நடந்தேறும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

Exit mobile version