‘நேற்று முன்தினம் தமிழகத்தில் ஏற்படும் மின் தடை குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மின் பராமரிப்பு தொடர்ந்து மினிவியோகம் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டார். கூட்டம் முடிவடைந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மின் தடையை பொறுத்துக் கொள்ளும் சகிப்புத்தன்மை, மக்களுக்கு குறைந்து விட்டது’ என பேசினார் தற்போது அதை பற்றி நான் பேசவில்லை என்று, அமைச்சர் சமாளிக்கிறார்.
அமைச்சர் மக்களின் சகிப்பு தன்மையை பற்றி பேசியது : பொது மக்களுக்கு, சில நிமிட மின் தடையை கூட பொறுத்துக் கொள்ளும் சகிப்புத்தன்மை குறைந்து விட்டது. பொது மக்களுக்காகவே நாங்கள், உங்களை நடு இரவில் கூட அழைத்து, தொந்தரவு செய்து வருகிறோம். இவ்வாறு, அவர் பேசினார்.
இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பினை கிளப்பியது. மக்களுக்கு சேவை செய்யாதான் நீங்கள் அவர்கள் எப்படி மக்களை குறை கூறலாம் என நெட்டிசன்கள் தெறிக்கவிட்டனர். கடந்தவாரம் மின்துறை அமைச்சரின் அணிலால் மின்வெட்டு சர்ச்சையை கிளப்பியது இந்த வாரம் பொது மக்களுக்கு சகிப்புத்தன்மை குறைந்து விட்டது என்ற அமைச்சரின் பேச்சு, சர்ச்சையை கிளப்பியது. திமுக வந்த பிறகுதான் மின்வெட்டு என்பதை உணர தொடங்கியுள்ளார்கள்.
மேலும் மக்களின் சகிப்பு தன்மை குறித்து சுகாதர துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீண்டும் விளக்கமளித்துள்ளார் : அவர் அளித்துள்ள பேட்டியில் நான் எந்த வகையிலும் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசவில்லை; பேசவும் மாட்டேன். மக்கள் பணியில் உள்ளாட்சித் துறை, காவல் துறையினருக்கு அடுத்தபடியாக, மின்சார துறையினர் தான், மக்களின் நேரடி தொடர்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில், ஆபத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றும் உன்னதமான பணிகளை, இரவு, பகல் பாராமல், அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
சாதரணமாகவே மின் வினியோகம் மற்றும் பராமரிப்பு பணிகளில் நடைபெறும் வேளைகளில் மின் தடை ஏற்படும். இது எல்லார் ஆட்சியிலும் நடப்பதே . மின் தடை ஏற்பட்டதும மக்கள் எங்களுக்கு புகார் அளிப்பார்கள் , மக்கள் பிரதிநிதிகளான நாங்கள், அதிகாரிகளை அழைத்து தொந்தரவு தருவது வழக்கம். எங்கள் வீட்டில் மின் தடை ஏற்பட்டதற்காக, அதிகாரிகளை அழைப்பதில்லை. பொது மக்களுக்காவே, நடு இரவிலும் அதிகாரிகளை தொந்தரவு செய்து வருகிறோம். பொது மக்களும் தங்களிடம் உள்ள மின் துறை தொடர்பான, அனைத்து அதிகாரிகளின் தொலைபேசி எண்களிலும் புகார் தெரிவிக்கின்றனர்.
எங்களுக்கும் தகவல் தெரிவிக்கின்றனர். எனவே தான், நாங்களும் வேறு வழியில்லாமல், மின் வாரிய துறையினரை தொந்தரவு செய்து, மின் தடைக்கு தீர்வு காண வலியுறுத்துகிறோம். இவ்வாறு, அமைச்சர் கூறினார். ஆனால் சகிப்பு தன்மை பற்றி சுகாதர துறை அமைச்சர் விளக்கம் அளிக்கவில்லை.