மசாலா பாக்கெட்டுகளில் போதை பொருள் கடத்தல்! ஜாபர் சாதிக்கின் மாஸ்டர் மைண்ட்! களத்தில் இறங்கும் என்.ஐ.ஏ

Drugs smuggled

Drugs smuggled

ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் முக்கிய கூட்டாளி சதா என்பவர் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டான் இவன் தான் ஜாபர் சாதிக்கிற்கு மாஸ்டர் மைண்டாக சதா தான் திகழ்ந்துள்ளான்.

திமுக முன்னாள் நிர்வாகியும் போதைப்பொருள் கடத்தல் மன்னனுமான ஜாபர் சாதிக்கிடம் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ,தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணையில் கடத்தலுக்கு சென்னையை சேர்ந்த வலது கரமாக செயல்பட்டதாக சதா என்கிற சதானந்தம் என்பவரை காட்டி கொடுத்துள்ளார் ஜாபர் சாதிக். இதனைத்தொடர்ந்து சதானந்தத்தை கைது செய்துள்ளனர்.

சென்னை , செங்குன்றம், திருச்சியில் உள்ள குடோனை மொத்தமாக நிர்வகித்து வருபவர்தான் தேனாம்பேட்டையை சேர்ந்த சதானந்தம்.கடந்த பத்து வருடங்களாக ஜாபர் சாதிக்குடன் இணைந்து போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகின்றது. பிரபல நிறுவனத்தின் மசாலா பாக்கெட் , தேங்காய் பவுடர், ராகி பவுடர் உள்ளிட்ட பல்வேறு பாக்கெட்டிற்குள் சூடோபெட்ரின் பாக்கெட்டை பேக்கிங் செய்து அனுப்பும் வேலையை சதா கச்சிதமாக செய்து வந்ததாகவும், விமான நிலையங்களின் கார்கோ மூலமாக வெளி நாடுகளுக்கு போதைப்பொருளை அனுப்பி வைப்பதை சதா செய்து வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மற்றும் திருச்சியில் இருந்து மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு போதைப் பொருளை பல முறை கடத்தி இருப்பதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் , கைது செய்யப்பட்ட சதாவை டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.ஜாபர் சாதிக்கை போலீஸ் காவலில் எடுத்து சென்னை அழைத்து வந்து விசாரணை செய்யும்போது அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருக்கு நெருக்கமாக இருந்த தொழில் முறை கூட்டாளிகளை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர்.

ஏற்கெனவே சென்னையில், சதா மீது மூன்று போதைப் பொருள் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.2020 ஆம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு மசாலா பாக்கெட்டுக்குள் வைத்து சூடோபெட்ரினை கடத்திய மாஸ்டர் மைண்ட் சதானந்தம் என்று கூறப்படும் நிலையில் அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியில் இருக்கும் நபர்களை பிடித்து விசாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இதற்கிடையே டெல்லி சென்று சந்தித்த தன்னிடம் ஜாபர் சாதிக், இறைவன் பார்த்துக்கொள்வார் என்று கூறியதாக வழக்கறிஞர் பிரபாகரன் தெரிவித்தார்

மேலும் போதைப்பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் வழக்கு ஆவணங்களை டெல்லி என்.ஐ.ஏ. கேட்டுள்ளது. பணப் பரிவர்த்தனைகள், வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் இருந்து என்.ஐ.ஏ. கோரியுள்ளது. ஏற்கெனவே அமலாக்கத்துறையும் வழக்கை விசாரிக்கும் நிலையில் என்.ஐ.ஏ.யும் விவரங்களை கேட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு சென்றுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

, இந்த விவகாரத்தில் நேரடியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகரே இறங்கிஉள்ளார்’ எனவும் சொல்லப்படுகிறது. விவகாரம் பெரிதாகி கொண்டே போவதால் தமிழகத்தில் சுனாமி வீசகூடும் அதில் பல அரசியல் தலைவர்கள் முதல் பிரிவினைவாதம் பேசும் அமைப்புகள் எல்லாம் சிக்கி சின்னாபின்னமாகும் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றார்கள். 

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version